
Murrah Buffalo Business: நீங்க கிராமத்துல இருந்து வருமானத்துக்கு ஏதாவது வழி தேடிட்டு இருந்தா, ஒரு ஸ்பெஷல் எருமை மாடு வளர்க்கலாம். இதோட பாலை வித்து லட்சக்கணக்குல சம்பாதிக்கலாம். உ.பி-ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானாவுல இந்த எருமை மாடு அதிகமா வளர்க்கப்படுது. இது அதிக பால் தரக்கூடிய எருமை இனங்கள்ல ஒண்ணு. இதோட பேரு முர்ரா எருமை. இது மத்த எருமை மாட்ட விட அதிகமா பால் கொடுக்கும். இத வளர்த்து எப்படி நல்ல வருமானம் பாக்குறதுன்னு தெரிஞ்சுக்கலாம்.
முர்ரா எருமை மாடு (Murrah Buffalo) கருப்பு நிறத்துல ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும். இதோட கொம்பு சின்னதா, நல்லா வளைஞ்சு இருக்கும். முர்ரா எருமை மாடு 500ல இருந்து 600 கிலோ வரைக்கும் எடை இருக்கும். ஆனா, முர்ரா எருமை அதாவது பொட்டை மாடு 300-400 கிலோ வரைக்கும் இருக்கும். முர்ரா எருமை மாடு வெயில், குளிர்னு எல்லா சீதோஷ்ண நிலைக்கும் ஏத்த மாதிரி தன்னை மாத்திக்கிடும். இதுக்கு நோய் நொடியும் கம்மியா வரும். அதனால இத வளர்க்குறது ரொம்ப ஈஸி.
கொழுப்பு சத்துல முர்ரா எருமை மாட்டுப் பால் ஹை குவாலிட்டி (Murrah Buffalo Milk Quality) உள்ளது. இதுல 7-8% வரைக்கும் கொழுப்பு இருக்கும். அதனால நிறைய ஏடு வரும். இதனாலதான் இந்த எருமை மாட்டுக்கு டிமாண்ட் அதிகமா இருக்கு.
பால் கொடுக்குறதுல முர்ரா எருமை மாடு ரொம்ப நல்லதுன்னு சொல்லுவாங்க. மத்த இன எருமை மாட்ட விட இது அதிகமா பால் கொடுக்கும். இந்த எருமை மாடு டெய்லி 12ல இருந்து 18 லிட்டர் வரைக்கும் பால் கொடுக்கும். ஒரு வருஷத்துல 3000-4000 லிட்டர் வரைக்கும் பால் கொடுக்கும். முர்ரா எருமை மாட்டுப் பாலோட குவாலிட்டி ரொம்ப நல்லா இருக்குறதால, மார்க்கெட்ல இதுக்கு நல்ல டிமாண்ட் இருக்கு. அதனால இது ஹை ரேட்ல விக்கும். இதுல நல்ல வருமானம் கிடைக்கும். பிசினஸுக்கு இந்த எருமை மாடு ரொம்ப நல்லது. வருஷத்துக்கு லட்சக்கணக்குல சம்பாதிக்கலாம்.
நீங்க முர்ரா எருமை மாடு வளர்த்தா ஆரம்பத்துல 1.50 லட்சத்துல இருந்து 2 லட்சம் வரைக்கும் செலவாகும். ஆனா, இதுல இருந்து மாசம் 40-50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம். ஒரு லிட்டர் பாலோட விலை 60 ரூபாய்னு வெச்சுக்கிட்டா, உங்க எருமை மாடு டெய்லி 18 லிட்டர் பால் கொடுத்தா, நீங்க டெய்லி 1,080 ரூபாயும், மாசத்துல 32,000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம். இது வருஷத்துக்கு 4 லட்சம் ரூபாய் வரைக்கும் வரும். இப்படி வருமானம் அதிகமாகுறப்ப நீங்க முர்ரா எருமை மாட்டோட எண்ணிக்கைய அதிகப்படுத்தி அதிகமா சம்பாதிக்கலாம்.
இந்திய பங்குச் சந்தையில் இன்று கவனம் செலுத்த வேண்டிய பங்குகள்; Sensex, Nifty நிலவரம் என்ன?
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.