Share Market Today: பங்குச்சந்தையில் பலத்த அடி! காரணம் என்ன? சென்செக்ஸ் 400 புள்ளிகள் வீழ்ச்சி

By Pothy RajFirst Published Dec 2, 2022, 3:58 PM IST
Highlights

கடந்த 8 நாட்களாக லாபத்தோடு முடிந்த மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை வர்த்தகம் வாரத்தின் கடைசிநாளன இன்று சரிவுடன் முடித்தது. 

கடந்த 8 நாட்களாக லாபத்தோடு முடிந்த மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை வர்த்தகம் வாரத்தின் கடைசிநாளன இன்று சரிவுடன் முடித்தது. 

முதலீட்டாளர்கள் கடந்த 8 நாட்களாக பார்த்த லாபத்தை வாரத்தின் கடைசி நாளான இன்று எடுக்க முயன்றனர். இதனால் காலை முதலே பங்குகளை கைமாற்றியதால் சந்தையி்ல் சரிவு காணப்பட்டது. இந்த வீழ்ச்சி மாலை வரை தொடர்ந்ததால் பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டது.

7நாட்களுக்குப்பின் பங்குச்சந்தையில் சரிவு: சென்செக்ஸ் நிப்டி, வீழ்ச்சி

அமெரிக்க பெடரல் வங்கியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அமெரிக்காவின் நவம்பர் மாத வேலையின்மை நிலவரம் குறித்த அறிக்கை இன்று வெளியாகிறது.

இது தவிர அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலைக்கு வாய்ப்புள்ளதாக எழுச்சரிக்கையால் முதலீட்டாளர்கள் கலக்க மடைந்தனர். நவம்பர் மாதத்தில் அமெரிக்காவின் உற்பத்துறை செயல்பாடு குறையக்கூடும் என்ற புள்ளிவிவரங்கள் முதலீட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியது. 

வர்த்தகம் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டதும், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 298 புள்ளிகளும், தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 88 புள்ளிகளும் சரிந்தன. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 184 புள்ளிகள் உயர்ந்தாலும், அதை வர்த்தகம் முழுவதும் தக்கவைக்க முடியவில்லை. 

முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை கைமாற்றுவதிலேயே ஆர்வமாக இருந்ததால் சரிவு தொடர்ந்தது. மாலை வர்த்தகம் முடிவில், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 415 புள்ளிகள் குறைந்து, 62,868 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 116 புள்ளிகள் குறைந்து, 18,696 புள்ளிகளில் முடிந்தது.

இந்தியாவில் வேலையின்மை 3 மாதங்களில் இல்லாத அளவு 8 சதவீதமாக நவம்பரில் அதிகரிப்பு:சிஎம்ஐஇ கணிப்பு

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களின் பங்குகளில், 9 நிறுவனப் பங்குகள் மட்டுமே லாபத்தில் முடிந்தன. மற்றநிறுவனங்களின் பங்குகள் சரிவில் முடிந்தன. குறிப்பாக டாக்டர்ரெட்டீஸ், டாடா ஸ்டீல், இன்டஸ்இன்ட்வங்கி, ஹெச்சிஎல் டெக், ஆக்சிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், என்டிபிசி ஆகிய பங்குகள் விலை உயர்ந்தன.

நிப்டியில் ஊடகத்துறை பங்குகள் 1.22% உயர்ந்தன, அதைத்தொடர்ந்து உலோகம்0.44%, பொதுத்துறை வங்கி 0.42% உயர்ந்தன.மற்ற துறைப்பங்குகள் விலை குறைந்தன. நிப்டியில் எய்ச்சர் மோட்டார்ஸ், மகிந்திரா அன்ட் மகிந்திரா, டாடா நுகர்வோர் பொருட்கள், ஹெச்யுஎல், ஹீரோ மோட்டார் கார்ப் ஆகிய பங்குகள் லாபமடைந்தன. அப்பல்லோ மருத்துவமனை, கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ், டெக் மகிந்திரா, டாடா ஸ்டீல், டாக்டர் ரெட்டீஸ் பங்குகள் விலை குறைந்தன.

click me!