Gold Rate Today: உச்சத்தில் தங்கம் விலை! சவரன் ரூ.40ஆயிரத்தைக் கடந்தது! நிலவரம் என்ன?

By Pothy RajFirst Published Dec 2, 2022, 10:08 AM IST
Highlights

தங்கம் விலை மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. தங்கம் கிராம் ரூ.5 ஆயிரத்தைக் கடந்தும், சவரன் ரூ.40ஆயிரத்தையும் கடந்துள்ளது.

தங்கம் விலை மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. தங்கம் கிராம் ரூ.5 ஆயிரத்தைக் கடந்தும், சவரன் ரூ.40ஆயிரத்தையும் கடந்துள்ளது.

கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.752 அதிகரித்துள்ளது. தங்கம் விலை இன்று கிராமுக்கு 55 ரூபாயும், சவரனுக்கு 440 ரூபாயும் அதிகரித்துள்ளது. 

தங்கம் விலை தொடர் அதிகரிப்பு! நடுத்தர குடும்பத்தினருக்கு ஷாக்! வெள்ளி விர்ர்! நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,955ஆகவும், சவரன், ரூ.39,640 ஆகவும் இருந்தது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வெள்ளிக்கிழமை) கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து ரூ.5,010 ஆகவும், சவரனுக்கு 440 ரூபாய் அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 80ஆக அதிகரித்துள்ளது.கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,010க்கு விற்கப்படுகிறது.

ஊசலாட்டத்தில் தங்கம் ! மீண்டும் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் என்ன?

அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்து வருவதால், இனிமேல் வட்டிவீதம் பெரிதாக உயர்த்தப்படாது என்ற அறிவிப்பால், முதலீட்டாளர்கள் பங்குப்பத்திரிங்களில் முதலீட்டை தங்கத்தின் மீது திருப்பியுள்ளனர்.

இதனால்தான் கடந்த வாரத்தில் பெடரல் வங்கி அறிவிப்பை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் அமைதிகாத்தனர். பெடர்ல் வங்கி அறிவிப்பு கிடைத்ததும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த தொடர் விலை உயர்வு, தங்க வாங்க நினைப்போருக்கும், நடுத்தரக் குடும்பத்தினருக்கும் பெரிய அதிர்ச்சியாகஅமைந்துள்ளது.  கடந்த 3 நாட்களில் தங்கம் சவரனுக்கு 752 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. 

என்டிடிவி இயக்குநர் பொறுப்பிலிருந்து பிரணாய் ராய், ராதிகா ராய் விலகல்


வெள்ளி விலையில் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 70 காசு உயர்ந்து,  ரூ.70.50 ஆகவும்,  கிலோவுக்கு ரூ.700 அதிகரித்து, ரூ.70,500 ஆகவும் ஏற்றம் கண்டுள்ளது

click me!