
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, அக நிவாரணப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்ட அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்புக்காக லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பாசிட்டிவான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஇஏ) இன்று, மார்ச் 7ஆம் தேதி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூத்த குடிமக்கள் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.. பணத்தை சேமிக்க உதவும் சில டிப்ஸ் இதோ..
4 சதவீத டிஏ உயர்வுக்குப் பிறகு, அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி 50 சதவீதமாக உயரும். ஜனவரி மற்றும் ஜூலை முதல் அமலுக்கு வரும் வகையில் ஆண்டுக்கு இரண்டு முறை டிஏ மற்றும் டிஆர் உயர்த்தப்படுகிறது. அகில இந்திய சிபிஐ-ஐடபிள்யூ தரவுகளின் அடிப்படையில் டிஏ மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆகியவை திய அரசால் தீர்மானிக்கப்படுகிறது. தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.
முன்னதாக கடந்த அக்டோபர் 2023 இல், அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டதால் 46 சதவீதமாக இருந்தது. தற்போதைய பணவீக்க விகிதத்தைப் பொறுத்தவரை, அடுத்த டிஏ உயர்வு 4 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கி வாடிக்கையாளர்களே உஷார்.. இந்த 2 வங்கிகளும் இணையப் போகிறது.. ஏப்ரல் முதல் அமல்..
7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டினால், வீட்டு வாடகைப் படி, குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை, போக்குவரத்து உதவித் தொகை போன்றவையும் உயரும். இந்த உயர்வால், மத்திய அரசு ஊழியர்கள் டேக் ஹோம் ஊதிய தொகுப்பு கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.