வங்கி வாடிக்கையாளர்களே உஷார்.. இந்த 2 வங்கிகளும் இணையப் போகிறது.. ஏப்ரல் முதல் அமல்..

By Raghupati R  |  First Published Mar 6, 2024, 1:21 PM IST

இந்த 2 வங்கிகளையும் இணைக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.


நம் இந்திய நாட்டில் மீண்டும் வங்கிகள் இணைப்பு நடைபெற உள்ளது. ஏப்ரல் 1, 2024 முதல், மேலும் இரண்டு வங்கிகள் இணைக்கப்பட உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது, இதற்கு ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த முறை Fincare Small Finance Bank Ltd, AU Small Finance Bank Ltd உடன் இணைக்கப்பட உள்ளது.

இந்த இரண்டு வங்கிகளும் ஏப்ரல் 1 முதல் ஒன்றாக மாறும். ஃபின்கேர் சிறு நிதி வங்கி (Fincare Small Finance Bank Limited) இன் அனைத்து கிளைகளும் ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (AU Small Finance Bank Limited) இன் கிளைகளாக ஏப்ரல் 01, 2024 முதல் செயல்படும். ஜனவரி 23 அன்று, AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் Fincare ஸ்மால் ஃபைனான்ஸ் இணைப்புக்கு இந்திய போட்டி ஆணையம் (CCI) ஒப்புதல் அளித்தது. 

Latest Videos

undefined

AU சிறு நிதி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட மற்றும் வணிக வங்கி சேவைகளை வழங்குகிறது. இதில் வைப்புத்தொகை, கடன், முன்பணம், டெபிட்-கிரெடிட் கார்டு மற்றும் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் போன்ற வசதிகள் அடங்கும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், பட்டியலிடப்படாத Fincare இன் பங்குதாரர்கள் அவர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு 2,000 பங்குகளுக்கும் சந்தையில் பட்டியலிடப்பட்ட AU SFB இன் 579 பங்குகளைப் பெறுவார்கள்.

AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி அக்டோபர் 30 அன்று Fincare SFB உடன் இணைப்பது பற்றிய தகவலை வழங்கியது. தற்போது, இரண்டையும் இணைக்க இன்னும் ஒரு மாதம் ஆகும். Fincare SFB மற்றும் AU SFB ஆகிய இரண்டின் பங்குதாரர்களின் ஒப்புதலும் தேவைப்பட்டது. இது தவிர, ரிசர்வ் வங்கி மற்றும் சிசிஐ ஆகியவற்றிலிருந்து ஒழுங்குமுறை ஒப்புதல் தேவைப்பட்டது.

இணைப்பிற்குப் பிறகு, Fincare SFB இன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி AU SFB இன் துணை CEO ஆவர். இதனுடன், ஃபின்கேர் SFB வாரியத்தின் இயக்குநர் திவ்யா சேகலும் AU சிறு நிதி வங்கியின் குழுவில் இடம் பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் 10000 ரூபாய் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?

click me!