Best Investment Scheme | எந்தவொரு முதலீட்டிற்கும், நிதி இழப்பு அபாயம் என்பது பொதுவானது. சந்தை வீழ்ச்சிகளின் போது நிதி இழப்புகளிலிருந்து பாதுகாப்பாக தங்கத்தில் முதலீடு செய்வது ஒரு புத்திசாலித்தனமான முடிவு தான். ஆனால் தங்கத்தில் முதலீடு செய்வது என முடிவெடுத்துவிட்டால், அதுபற்றி முழுதகவல்களையும் தெரிந்த பிறகே முதலீடு செய்யுங்கள்.
பிற்கால தேவைக்காகவும், நீண்டநாள் தேவைக்காகவும் முதலீடு செய்ய தயாராக இருப்பவர்கள், முதலில் தங்க முதலீட்டை கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக இளைய தலைமுறையினர். ஏனென்றால், முதலீடுகளை பன்முகப்படுத்தவும், நிதி இழப்புகளிலிருந்து உங்கள் முதலீட்டை அதாவது பணத்தை பாதுகாக்கவும் முயற்சிக்கும்போது தங்கத்தில் முதலீடு செய்வது சாலச் சிறந்தது. இது உங்கள் நிதி இழப்பு அபாயத்தை குறைக்கும். தங்க முதலீடு குறித்த தகவலைகள் இதோ உங்களுக்காக..
தங்கத்தில் முதலீடு செய்யும்போது நினைவில் கொள்ள வேண்டிய ஐந்து முக்கியமான விஷயங்கள்:
1. முதலீட்டு நோக்கங்களைப் புரிந்து கொள்ளுங்கள்
தங்க முதலீட்டு திட்டத்தில் நீங்கள் அடியெடுத்து வைப்பதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்களை நன்கு நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஏன் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் எந்த வகையான தங்க முதலீடு உங்களுக்கு ஏற்றது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
16 வயசு ஆகிருச்சா? மாதம் ரூ.3,000 வருமானம் கொடுக்கும் மத்திய அரசின் திட்டத்தில் சேருங்க!
2. பல்வகைப்படுத்தல் முக்கியமானது
தங்கத்தில் முதலீடு செய்வது என்பது நிதி இழப்பு அபாயத்தை குறைக்கும். இது ஒரு புத்திசாலித்தனமான முடிவும் கூட. இருப்பினும், ஆபத்தை குறைக்க பல்வகைப்படுத்தல் மிக அவசியம். பல்வேறு பங்குகள், பத்திரங்கள், சொத்துக்கள், பணத்திற்கு சமமானவைகளில் முதலீடு செய்யுங்கள். இந்த பல்வகைப்படுத்தல் மூலம் உங்கள் முதலீட்டை சந்தை ஏற்ற இறக்கங்களில் இருந்து பாதுகாக்க முடியும்.
3. உங்களுக்கு எந்த தங்க முதலீடு தேவை என்பதை தேர்வு செய்யவும்
தங்க பத்திரம், நேரடி தங்கம், டிஜிட்டல் தங்கம் போன்ற பல வழிகளில் தங்கத்தை முதலீடு செய்யலாம். ஒவ்வொரு வகைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன. தங்கம் உண்மையான பாதுகாப்பை வழங்கும் அதே வேளையில், அது பாதுகாப்பாகவும் வைக்கப்பட வேண்டும். தங்க முதலீட்டின் சிறந்த வகையைத் தீர்மானிக்கும் போது, உங்கள் விருப்பத்தேர்வுகள் மற்றும் இடர் வெளிப்பாட்டைக் கருத்தில் கொள்ளுங்கள்.
undefined
இந்த வசதிகள் அனைத்தும் இலவசம் தான்... ரயிலில் பயணம் செய்யும் போது மறக்க யூஸ் பண்ணிக்கோங்க!
4. நேரம்
தங்கம் வாங்கும் போது, மற்ற முதலீடுகளைப் போலவே, நேரமும் மிகவும் முக்கியம். சந்தை நிலவரங்கள் அதாவது பண்டிகைகள், விசேஷ நாட்கள், பொருளாதார நிலைகள் தங்கத்தின் விலையை பாதிக்கிறது. தங்கத்தை முறையான மதிப்பீடு செய்த பின்னரே வாங்கவும்.
5. செலவுகள் மற்றும் அபாயங்களைப் புரிந்து கொள்ளுங்கள்
தங்கத்தில் முதலீடு செய்வதற்கான செலவுகள் மற்றும் அபாயங்களைப் புரிந்து கொள்ளுங்கள். தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்பட்டாலும், அதற்கு ஆபத்துகளும் உண்டு கவனத்தில் கொள்ளவும்.