
அதிரடியாக ரூ 1456 உயர்ந்து ,சவரன் ரூ 24,000 – ஐ தாண்டியது...!! பேரதிர்ச்சியில் பொதுமக்கள் ....!!!
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நேற்றிரவு மோடி அறிவித்தார். இதனை தொடர்ந்து இந்திய பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி காணபடுகிறது. மேலும், தங்கத்தின் விலை கிடு கிடு என உயர்ந்துள்ளது.
கடந்த சில தினங்களாக , சற்று குறைவான விலையில் தங்கம் விற்பனையானது. தற்போது சில நாட்களாக தொடர்ந்து , தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பை தொடர்ந்து, தங்கத்தில் வில மலை போல் உயர்ந்தது.
இந்நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, தற்போது 22 கேரட் ஆபரண தங்கம் , கிராமுக்கு 182 ரூபாய் உயர்ந்து, 3 ஆயிரத்து 60 ரூபாய்க்கும், சவரனுக்கு 1456 ரூபாய் உயர்ந்து, சவரன் 24 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்கபடுகிறது.
அதே சமயத்தில், 24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம் 31 ஆயிரத்து 660 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி 48 ரூபாய் 10 காசுக்கும் ,
ஒரு கிலோ பார் வெள்ளி 44 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது…
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.