"உங்களிடம் ரூ.500,1000 நோட்டு நெறைய இருக்கா?? நீங்கள் செய்ய வேண்டியது என்ன...?" - இத படிங்க...!!!

Asianet News Tamil  
Published : Nov 10, 2016, 12:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
"உங்களிடம் ரூ.500,1000 நோட்டு நெறைய  இருக்கா?? நீங்கள் செய்ய வேண்டியது என்ன...?" - இத படிங்க...!!!

சுருக்கம்

செய்ய வேண்டியவை … 

* 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் எவ்வளவு மதிப்பில் இருந்தாலும் வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் அவற்றைக் கொடுத்து அதே மதிப்புள்ள வேறு ரூபாய் நோட்டுகளைப் பெறலாம்.

* ஆனால் 4 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை மாற்ற முயன்றால், 4 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும், மீதமுள்ளவை வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படும். 

*நோட்டை மாற்றும்போது புதிய 500 மற்றும் 2000 நோட்டுக்களாகவும் பெறலாம். 

* 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட்டும் செய்யலாம். 

* பணத்தை மாற்றும்போதோ, டெபாசிட் செய்யும்போதோ அடையாள அட்டைகளில் ஒன்று அவசியம்.

* அடையாள அட்டை விவரங்களை வங்கி பதிவு செய்யும்.

* இதற்காக வங்கிகளில் கூடுதல் கவுன்ட்டர்கள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

* 500, 1000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெற கூடுதல் வேலை நேரம் செயல்படவும் வங்கிகள் ஒப்புக் கொண்டிருக்கின்றன. 

* 4 ஆயிரம் ரூபாய் என்பது போதாது என்றால், அதற்கு மேற்பட்ட தொகையை காசோலை, இணைய தள வங்கிச் சேவை, டெபிட் கார்டு ஆகிய வழிகளில் செலவிடலாம். 

* வங்கிக் கணக்கு இல்லாதவர்களிடம் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் இருந்தால், புதிய வங்கிக் கணக்கு தொடங்கி மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும். 

* ரிசர்வ் வங்கிக் கிளைகள், தனியார், பொதுத் துறை மற்றும் கூட்டுறவு வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம்.

* 4 ஆயிரம் ரூபாய் வரை மாற்ற, எந்த வங்கி அல்லது அஞ்சல் நிலையத்தையும் அணுகலாம்.

* அதற்கு மேல் தொகையை மாற்ற, கணக்கு வைத்துள்ள வங்கியை மட்டுமே அணுக வேண்டும். 

* கணக்கு வைத்துள்ள வங்கியின் எந்தக் கிளையிலும் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம்.

*வங்கிக்கு நேரடியாக செல்ல இயலாதவர்கள் பிரதிநிதியை அனுப்பி அத்தாட்சிக் கடிதம் தர வேண்டும்.

* பணத்தை செலுத்துபவர் தனது அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்

* புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்மில் வழங்குவதற்கான தொழில்நுட்பம் வர சில நாட்கள் ஆகலாம்.

* அதன் பிறகு 18ம் தேதி வரை நாளொன்றுக்கு அதிகபட்சம் 2 ஆயிரம் ரூபாயும், 

* 19ம் தேதி முதல் 4 ஆயிரம் ரூபாயும் எடுக்க அனுமதிக்கப்படும். 

* அதன் பிறகு இந்த உச்ச வரம்பு 10 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

 *அதேபோல, வரும் 24ம் தேதி வரை வங்கிகளில் பணமெடுக்கும் விண்ணப்பத்தில் 10 ஆயிரம் ரூபாய் வரையும்,

* காசோலையில் 20 ஆயிரம் ரூபாய் வரையும் மட்டுமே பணம் பெற முடியும். 

* அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பு வரை வழக்கம்போல ஏடிஎம்களில் பணம் டெபாசிட் செய்யலாம். 

* ரொக்கம் தவிர்த்து, மொபைல் பேங்க்கிங், இன்டர்நெட் பேங்க்கிங், ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் ஆகிய மின்னணு பரிமாற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. 

* டிசம்பர் 30ம் தேதி வரை 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

* அரசு மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், விமான டிக்கெட்  ஆகியவை 11ம் தேதி வரை 500, 1000 ரூபாய் ஏற்கப்படும். 

* கூடுதல் விவரங்களுக்கு ரிசர்வ் வங்கி இணைய தளத்தில் தகவல்கள் உள்ளன.

* சந்தேகங்கள் இருந்தால் ரிசர்வ் வங்கியின் மும்பை அலுவலக எண்களான 02 - 22602201, 22602944 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

இனி ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அவ்ளோதான்.. ரயில்வே விடுத்த கடும் எச்சரிக்கை
ஆதார் கார்டு இருக்கா? மத்திய அரசின் ரூ.50,000 உதவி தொகை கிடைக்கும்.! எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் இதோ.!