அமெரிக்காவில் 40 பில்லியன் டாலர் முதலீடு செய்த 163 இந்திய நிறுவனங்கள்! ஆய்வில் தகவல்

By SG BalanFirst Published May 4, 2023, 11:55 AM IST
Highlights

‘இந்திய வேர்கள், அமெரிக்க மண்’ என்ற தலைப்பில் இந்திய தொழில் கூட்டமைப்பு நடந்திய ஆய்வு முடிவு புதன்கிழமை வெளியிடப்பட்டது.

163 இந்திய நிறுவனங்கள் இதுவரை அமெரிக்காவில் 40 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்துள்ளன. இது நாட்டில் கிட்டத்தட்ட 425,000 வேலைகளை உருவாக்கியுள்ளது என இந்திய தொழில் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் கார்செட்டி முன்னிலையில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து புதன்கிழமை இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) நடந்திய 'இந்திய வேர்கள், அமெரிக்க மண்' என்ற ஆய்வு முடிவுகள் வெளியிட்டார். அதில், அமெரிக்காவில் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பிற்காக இந்திய நிறுவனங்கள் கிட்டத்தட்ட 185 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவழித்தன என்றும் அந்த நிறுவனங்கள் சார்பில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (ஆர்&டி) திட்டங்களுக்காக கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் நிதியுதவி செய்யப்பட்டிருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

உலக வங்கி தலைவர் ஆகிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா

163 இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் 40 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் முதலீடு செய்துள்ளன. மேலும் நாட்டில் கிட்டத்தட்ட 425,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளனர் என்று கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

டெக்சாஸ் (20,906 வேலைகள்), நியூயார்க் (19,162 வேலைகள்), நியூ ஜெர்சி (17,713 வேலைகள்), வாஷிங்டன் (14,525 வேலைகள்), புளோரிடா (14,418 வேலைகள்), கலிபோர்னியா (14,334 வேலைகள்), ஜார்ஜியா (13,945 வேலைகள்), ஓஹியோ (12,188 வேலைகள்), மொன்டானா (9,603 வேலைகள்), இல்லினாய்ஸ் (8,454 வேலைகள்) ஆகியவை இந்திய நிறுவனங்கள் உருவாக்கிய வேலைவாய்ப்புகளால் அதிகம் பயனடைந்த பத்து அமெரிக்க மாகாணங்கள் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஐபிஎம் நிறுவனத்தில் 7800 பேருக்கு ஆப்பு.? இனி AIதான் வேலை செய்யும் - ஐபிஎம் சிஇஓ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

விழாவில் பேசிய அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து, “அமெரிக்காவில் உள்ள இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு வலிமை மற்றும் போட்டியைக் கொண்டு வருகின்றன. வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறார்கள், உள்ளூர் சமூகங்களை ஆதரிக்கிறார்கள். திறன் மற்றும் தொழில்நுட்ப அறிவை உருவாக்குகிறார்கள் ”என்று கூறினார்.

“அமெரிக்கா முழுவதும் எனது பயணங்களில், அமெரிக்காவில் உள்ள சுற்றுப்புறங்களை மாற்ற இந்திய நிறுவனங்கள் என்ன செய்தன என்பதைப் பார்த்து நான் வியப்படைந்தேன். அவர்கள் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு, முதலீடு மற்றும் வளர்ச்சியை மட்டும் உருவாக்கவில்லை; அவர்கள் உள்ளூர் சமூகங்களை ஆதரிக்கிறார்கள் மற்றும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் கூட்டாளியாக இருக்கிறார்கள். வெற்றி என்பது பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்றும், பகிர்வதே வெற்றி என்றும் இந்தியா எப்போதும் நம்புகிறது” எனவும் அவர் சந்து குறிப்பிட்டார்.

சி.ஐ.ஐ. டைரக்டர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி பேசும்போது, இந்திய நிறுவனங்கள் அமெரிக்க சந்தையில் தங்கள் பின்னடைவு மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். இந்திய நிறுவனங்களின் எதிர்காலத் திட்டங்கள், அமெரிக்க - இந்தியா இடையேயான பொருளாதார உறவுக்கு சாதகமான வளர்ச்சிப் பாதையை சுட்டிக்காட்டுகின்றன எனவும் அவர் கூறினார்.

மாதம் ரூ.5,000 சேமித்தால் போதும்! 5 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சமாக மாறும்!

click me!