134 ஆண்டு பாரம்பரியம்.. ஆம்பூர் பிரியாணி முதலில் எப்படி தொடங்கப்பட்டது? உலகம் முழுவதும் எப்படி பிரபலமானது?

By Ramya s  |  First Published Aug 16, 2024, 3:44 PM IST

ஆம்பூர் பிரியாணி எப்படி இந்தியா முழுவதும் பிரபலமானது என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். ஆற்காடு நவாப்களின் சமையலறையிலிருந்து இன்று உலகம் முழுவதும் பிரபலமான உணவாக மாறிய கதை.


பிரியானி என்பது சிலருக்கு வெறும் உணவு ஆனால் சிலருக்கு பிரியாணி என்பது ஓர் உணர்வு. தினமும் பிரியாணி கொடுத்தாலும் சாப்பிடும் பலர் இருக்கத்தான் செய்கின்றனர். பலரின் ஃபேவரைட் உணவாக பிரியாணி உள்ளது. பிரியாணி என்பது பாரசீக மற்றும் முகலாய செல்வாக்குடன் இந்தியாவில் இடம்பிடித்த ஒரு உணவு என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில் பல வகை பிரியாணிகள் உள்ளன. ஆற்காடு பிரியாணி, ஆம்பூர் பிரியானி, ஹைதராபாத் பிரியாணி, மூங்கில் பிரியாணி, மலபார் பிரியாணி என அடுக்கிக்கொண்டே போகலாம்.

அந்த வகையில் இந்தியாவின் மிகவும் பிரபலமான பிரியாணிகளில் ஒன்று - ஆம்பூர் பிரியாணி. இப்பகுதியை ஆண்ட ஆற்காடு நவாப்கள் அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆம்பூர் பிரியாணி இந்து இந்தியா முழுவதும் பிரபலமடைந்தது ஒரே ஒரு மனிதரால் தான். ஆற்காடு நவாப்களின் அரச சமையலறைகளில் சமையல்காரரான ஹுசைன் பெய்க் 1890-ம் ஆண்டு தனது வீட்டில் பிரியாணி விற்பனை செய்ய தொடங்கினார். அவரின் சுவையான பிரியாணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் பிரியாணி விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.

Latest Videos

undefined

அதிக பணம் அதிக மகிழ்ச்சியை கொடுக்குமா? வாழ்வில் வெற்றி பெற இதுதான் சீக்ரெட்..

1920-ம் ஆண்டு அவரின் பிரியாணி ஆம்பூர் நகர் முழுவதுமே பிரபலமானது. ஆம்பூர் பிரியாணி என்ற பெயரும் அப்போது தான் வந்தது. இதை தொடர்ந்து, பெரிய கூட்டங்கள் மற்றும் திருமணங்களுக்கு சமைக்கத் தொடங்கினார். ஹுசைனினி பிரியாணிக்கு தேவை அதிகரித்து வந்த நிலையில் 1927-ம் ஆண்டு ஹுசைன் பெய்க்கின் மகன் குர்ஷித் பெய்க், தனது தந்தையின் பிரியாணியை வுன் பஜாரில் அதிக தேவை விற்கத் தொடங்கினார்.

1932-ம் ஆண்டு குர்ஷித் பெய்க் பரபரப்பான டவுன் பஜாரில் ஒரு சிறிய உணவகத்தைத் திறந்து அதற்கு குர்ஷித் ஹோட்டல் என்று பெயரிட்டார், அது இன்றும் உள்ளது. 1971-ம் ஆண்டு குர்ஷித் பைக்கின் மருமகன் நசீர் அகமது ரஹாமானியா பிரியாணியை பஜாரில் திறந்து வைத்தார், இந்த கடையும் இன்றும் உள்ளது.

1990-ம் ஆண்டு நசீர் அகமதுவின் மகன் முனீர் அகமது தனது குடும்ப மரபைப் பின்பற்றி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்டார் பிரியாணியைத் திறந்தார். 1992-ம் ஆண்டு ஸ்டார் பிரியாணி சிறந்த பிரியாணி, நாடு தழுவிய அங்கீகாரம் பெற்றது. 2005-ம் ஆண்டு அனீஸ் அகமது, வடபழனியில் முதல் சென்னை விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார்.

ரூ.70 லட்சம் வரை சம்பளம்.. டிகிரி இல்லாமலே இந்தியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் வேலைகள்..

2011-ல் ஸ்டார் பிரியாணியின் 10வது விற்பனை நிலையம் பெங்களூரு மற்றும் தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் திறக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு ஸ்டார் பிரியாணி இந்தியாவில் சுமார் 34 விற்பனை நிலையங்களுக்கு வேகமாக விரிவடைந்தது. 2019 முனீர் மற்றும் அனீஸ் ஆகியோரால் ஸ்டார் பிரியாணியின் ஃப்ரிஸ்ட் சர்வதேச கிளை துபாயில் திறக்கப்பட்டது. 

click me!