கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே பணிபுரிபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது, இனியும் பலரும் வீட்டிலிருந்தே பலரும் பணிபுரிய விரும்புகிறார்கள். வீட்டிலிருந்து பணிபுரிவதன் மூலம் கூடுதலாக மின்சாரம், இணையதளம், மருத்துவச் செலவு, உணவு ஆகியவற்றுக்கான செலவை ஈடுகட்ட சலுகை அளிக்கப்படலாம்.
2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் வீட்டில் இருந்து பணியாற்றுவோர்(work from home) வரிச்சலுகை அளிக்கப்படலாம் என பெரும்பலான பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் தொழில் துறையினர், நடுத்தர வர்க்கத்தினர், ஏழை மக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதும் கொரோனா முடிவுக்கு வராவிட்டாலும், தடுப்பூசிகள் வந்த பிறகு நிலைமை மாறி உள்ளது. அனைத்து துறைகளும் சகஜ நிலைக்கு வேகமாக திரும்பிக் கொண்டிருக்கின்றன.
undefined
இந்நிலையில், 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில், வீட்டில் இருந்து பணியாற்றுவோர்(work from home) வரிச்சலுகை அளிக்கப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே பணிபுரிபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது, இனியும் பலரும் வீட்டிலிருந்தே பலரும் பணிபுரிய விரும்புகிறார்கள். வீட்டிலிருந்து பணிபுரிவதன் மூலம் கூடுதலாக மின்சாரம், இணையதளம், மருத்துவச் செலவு, உணவு ஆகியவற்றுக்கான செலவை ஈடுகட்ட சலுகை அளிக்கப்படலாம்.
அவ்வாறு சலுகை அளிக்கப்பட்டால், வரிசெலுத்துவோர் செலவு மிச்சமாகி சேமிப்பு அதிகரிக்கும், வரிசலுகை அளிப்பதன்மூலம் அந்தத் தொகையை வேறு செலவுகளுக்கு பணத்தைத் திருப்புவார்கள். மாதத்துக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.50ஆயிரம் வரை வரிச்சலுகை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது. இதன்படி வீட்டிலிருந்தே பணிபுரிபவர்கள் 80சி படிவம் மூலம் ரூ.50ஆயிரம்வரை விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது.