Budget 2022: எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா மத்திய பட்ஜெட்? நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சக அலுவலகம் வருகை.!

By vinoth kumar  |  First Published Feb 1, 2022, 9:56 AM IST

2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும். 


2022-23ம் நிதியாண்டிற்கான காகிதம் இல்லாத மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் தொழில் துறையினர், நடுத்தர வர்க்கத்தினர், ஏழை மக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதும் கொரோனா முடிவுக்கு வராவிட்டாலும், தடுப்பூசிகள் வந்த பிறகு நிலைமை மாறி உள்ளது. அனைத்து துறைகளும் சகஜ நிலைக்கு வேகமாக திரும்பிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று தொடங்கியது. அதன்படி, இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உரை நிகழ்த்தினார்.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும். மத்திய பட்ஜெட் காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது நிதி அமைச்சக அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். நிதி அமைச்சகத்தில் இருந்து பட்ஜெட் விவரங்கள் அடங்கிய லெப்டாப் உடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆசிப்பெற்றார்.

 

click me!