மத்திய பட்ஜெட் 2024: முத்ரா கடன் திட்டத்துக்கான நிதி ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு!

By SG Balan  |  First Published Jul 23, 2024, 11:48 AM IST

சிறு குறு நிறுவனங்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மத்திய அரசின் முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மத்திய அரசின் முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2024-25-ம் நிதி ஆண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துவருகிறார்.  3வது முறையாக மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்த பின்பு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டாக உள்ளது. மோடி ஆட்சிக்கு மக்கள் 3வது முறையாக வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறி, பட்ஜெட் உரையைத் தொடங்கினார்.

Latest Videos

முத்ரா கடன் திட்டம் கார்ப்பரேட் அல்லாத சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்திட்டத்திற்கான நிதி அதிகரிக்கப்படுகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.

மத்திய பட்ஜெட் 2024: விவசாயத்துறைக்கு 1.52 லட்சம் கோடி! இயற்கை விவசாயத்தில் 1 கோடி இளைஞர்கள்!

முத்ரா கடன்களுக்கான ஒதுக்கீடு ரூ.10 லட்சம் கோடியில் இருந்து ரூ.20 லட்சம் கோடியாக இரட்டிப்பாகிறது. இந்த விரிவாக்கம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வளர்ச்சி மற்றும் புதுமைகளைத் தூண்டுவதற்கு தேவையான நிதி உதவியை அவர்களுக்கு வழங்குகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

நாடு முழுவதும் தொழில்முனைவோரை வளர்ப்பதிலும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதிலும் இந்தத் திட்டம் வெற்றி அடைந்துள்ளதாக நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார். சிறுதொழில்களை வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஆதரிக்கும் நோக்கில் புதிய கடன் உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடன் அபாயங்கள் குறைக்கப்படும் என்று கூறினார். இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ரூ.100 கோடி வரை கவரேஜை வழங்கும் என்று சீதாராமன் தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட் 2024: நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களில் மாற்றம் என்ன?

click me!