2022 பட்ஜெட்: சம்பளம் வாங்கும் சாமானியர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

By manimegalai a  |  First Published Jan 31, 2022, 2:51 PM IST

மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். ஊதியம் பெறும் சாமானிய, நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும், நிலையான கழிவில் உயர்வு இருக்குமா, வருமானவரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா, குழந்தைகளின் கல்விக்காகச் செலவிடப்படும் செலவுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுமா போன்ற எதிர்பார்ப்புகள் இருக்கின்றன 


மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசு 2-வது முறையாக பதவி ஏற்று தனது 4-வது பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளது.
மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். ஊதியம் பெறும் சாமானிய, நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும், நிலையான கழிவில் உயர்வு இருக்குமா, வருமானவரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா, குழந்தைகளின் கல்விக்காகச் செலவிடப்படும் செலவுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுமா போன்ற எதிர்பார்ப்புகள் இருக்கின்றன 
இது குறித்து இந்த செய்தி அலசுகிறது

வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு சலுகை

Tap to resize

Latest Videos

undefined

2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் வீட்டில் இருந்து பணியாற்றுவோர்(work from home) வரிச்சலுகை அளிக்கப்படலாம் என பெரும்பலான பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே பணிபுரிபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது, இனியும் பலரும் வீட்டிலிருந்தே பலரும் பணிபுரிய விரும்புகிறார்கள். வீ்ட்டிலிருந்து பணிபுரிவதன் மூலம் கூடுதலாக மின்சாரம், இணையதளம், மருத்துவச் செலவு, உணவு ஆகியவற்றுக்கான செலவை ஈடுகட்ட சலுகை அளிக்கப்படலாம்.

அவ்வாறு சலுகை அளிக்கப்பட்டால், வரிசெலுத்துவோர் செலவு மிச்சமாகி சேமிப்பு அதிகரிக்கும், வரிசலுகை அளிப்பதன்மூலம் அந்தத் தொகையை வேறு செலவுகளுக்கு பணத்தைத் திருப்புவார்கள். அதுமட்டுமல்லாமல் நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் வரிவசூல் எதிர்பார்த்ததைவிட அதிகரித்துள்ளதால், மாத ஊதியம் பெறும் பிரிவினருக்கு நிலையான கழிவு பிரிவு16-ன் கீழ் ரூ.50ஆயிரமாக இருக்கிறது, அது உயர்த்தப்படலாம். அல்லது நாட்டின் பணவீக்கத்துக்கு அல்லது விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உயர்த்தப்படலாம்.

மாதத்துக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.50ஆயிரம் வரை வரிச்சலுகை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது. இதன்படி வீட்டிலிருந்தே பணிபுரிபவர்கள் 80சி படிவம் மூலம் ரூ.50ஆயிரம்வரை விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது

குழந்தைகளின் கல்விச் செலவுக்கு வரி விலக்கு

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊதியம் பெறும் பிரிவினர் வீட்டிலிருந்தே பணியாற்றும்போது செலவுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக மின்கட்டணம், இன்டர்நெட் கட்டணம் போன்றவற்றுக்காக செலவிட்டுள்ளனர். ஆனால், வருமானத்தின் அளவு குறையவில்லை, வரிவிதிப்புக்குள்ளாகிய வருமானத்தின் அளவும் குறையவில்லை. கொரோனா காலத்தில் மருத்துவச் செலவு, வீட்டுச் செலவு போன்றவையும் அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கான கல்விச் செலவும் உள்ளன. ஆதலால், வருமானத்தில் நிலையான கழிவு ரூ.50ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரி்க்கை இருக்கிறது

குழந்தைகளின் கல்விக்காகச் செலவிடப்படும் தொகைக்கு வரிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது. இதன் மூலம் சேமிக்கப்படும் தொகை அவர்களின் உயர்கல்விக்குச் செலவிடப்படும் என்பதால் வரிவிலக்கு எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக தங்கமகள் சேமிப்புத்திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.1.50 லட்சத்துக்கு 80சி விலக்கு பெறலாம். அதேபோல கல்விக்கான செலவிலும் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் அளவுக்கு விலக்கு தேவை என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது

வரிக்குறைப்பு

தற்போது ஆண்டுக்கு ரூ.10லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுவோருக்கு 30 சதவீதம் வரி  விதிக்கப்படுகிறது. இதை 25 சதவீதமாகக் குறைக்க கோரிக்கை எழுந்துள்ளது.குழந்தைகளுக்கான கல்விக்கட்டண உயர்வு, வீட்டு வாடகை உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவற்றால், வரிக்குறைப்பை ஊதியம் பெறும் பிரிவினர் எதிர்பார்க்கிறார்கள்

80சி உச்ச வரம்பு உயர்த்துதல்

ஊதியம் பெறும் பிரிவினர் தங்களுக்குரிய வரிவிதிப்புக்குள்ளாகிய ஊதியத்திலிருந்து விலக்கு பெறுவதற்கு 80சி படிவத்தில் தங்கள் முதலீடுகளைத் தெரிவித்து விலக்கு பெறுவர். அந்த வகையில் ரூ.1.50 லட்சம் வரை விலக்கு நடைமுறையில் இருக்கிறது. இந்த உச்ச வரம்பை உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
 

click me!