Budget2022 :பெண்களுக்கு முன்னுரிமை.. முத்தலாக் முறை ரத்து.. குடியரசுத்தலைவரின் உரையில் உள்ள சிறப்பம்சங்கள்.!

By vinoth kumar  |  First Published Jan 31, 2022, 1:08 PM IST

2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மக்களவை, மாநிலங்களவையில் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. 



சிறு விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதே நாட்டின் பிரதான இலக்கு என நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மக்களவை, மாநிலங்களவையில் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. 

Tap to resize

Latest Videos

undefined

உரையிலிருந்து முக்கிய அம்சங்கள்:


* இந்தியா தனது 75வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடி வருகிறது.

* நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

* நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அத்தனை போர் வீரர்களுக்கும் வணக்கங்கள்.

* கொரோனா தடுப்பூசி இயக்கம் நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது

* வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாக நடைபெறுகிறது

* ஓராண்டு காலத்திற்குள் 150 கோடி தடுப்பூசி செலுத்தியுள்ளோம்.

*  சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

*  கொரோனாவை அழிப்பதில் இந்திய தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

*  நாட்டின் 75% மக்களுக்கு 2 தவணை தடுப்பூசிகளும் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது.

* கொரோனா காலத்தில் ஏழைகளுக்கு அலவச உணவு பொருள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. 

* அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

* இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

* பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

* ஏழைகளுக்கு இலவச உணவு பொருள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது.

*  ஜல்ஜீவன் திட்டம் மூலம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

* நாட்டின் முன்னேற்றத்திற்காகவே புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. வள்ளுவரின் 'கற்க கசடற' எனும் குறளுக்கு இணங்க கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

*  ஜி.எஸ்.டி வரி வசூல் கடந்த ஒரு சில மாதங்களில் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.

* ஏற்றுமதியில் நமது நாடு தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது.

*  உலகிலேயே இந்தியாவின் தொழில்துறை சிறந்து விளங்குகிறது.

*  நாட்டின் ஒவ்வொரு துறையிலும் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

*  உற்பத்தி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றி வருகிறது.

*  இந்தியா தனது 75வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடி வருகிறது.

*  நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

*  நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அத்தனை போர் வீரர்களுக்கும் வணக்கங்கள்.

*  ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளின் முன்னேற்றத்திற்காக அரசு திட்டங்களை வகுத்து வருகிறது 

*  ஜம்மு -காஷ்மீர் மாநில மேம்பாட்டிற்காக ரூ.18,000 கோடியில் வளர்ச்சி திட்டங்கள்

*  ஜம்மு - காஷ்மீரில் 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன.

*  நாட்டின் ஒவ்வொரு துறையிலும் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. 

*  வங்கித்துறையில் தொடர்ந்து சீர்திருத்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

*  நாட்டில் 21 புதிய விமான நிலையங்கள் அமைக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது.

* நாட்டின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து ஏராளமான திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது.

* பாதுகாப்பு துறைக்கான தளவாட பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.

* தேஜஸ் போர் விமானம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

*  இஸ்லாமிய பெண்கள் பெரும் சவால்களை சந்தித்துவந்த முத்தலாக் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* பெண்களுக்கு அதிகாரமளித்தலில் அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது.

* பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ பிரச்சாரத்துக்குப் பலன் கிடைத்துள்ளது.

* நாடு முழுவதும் பள்ளிச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

click me!