வருவாயைப் பெருக்கும் வகையில் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள சொத்துக்களைப் பணமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
வருவாயைப் பெருக்கும் வகையில் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள சொத்துக்களைப் பணமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்
.
ரயில்வேத் துறையில் சிறப்பு வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாகவும், விமானப் போக்குவரத்துத் துறையில் மேலும் சில விமான நிலையங்களை தனியாருக்கு வழங்குவதன் மூலமாகவும் இத்தகைய பணமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி மத்திய அரசு பங்குகளை தனியாருக்கு விற்கவுள்ள நிறுவனங்களின் பட்டியலையும் அவர் அறிவித்துள்ளார். ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம், ஐடிபிஐ வங்கி, துறைமுகக் கழகம், பபன் ஹன்ஸ்( ஹெலிகாப்டர் கம்பெனி) கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட மேலும் 2 பொதுத் துறை வங்கிகளையும் ஒரு காப்பீடு நிறுவனத்தின் பங்குகளையும் விற்று 1.75 லட்சம் கோடி பணம் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.