தேசத்தின் வளர்ச்சி முக்கியம்; திறந்த மனதுடன் பட்ஜெட்டை விவாதியுங்கள்; எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

By manimegalai a  |  First Published Jan 31, 2022, 2:02 PM IST

பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமான முறையில் நடத்த எம்.பி.க்கள் உதவ வேண்டும். திறந்த மனதுடன் அனைத்தையும் விவாதித்து தேசத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி எம்.பிக்களிடம் கேட்டுக்கொண்டார்.


பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமான முறையில் நடத்த எம்.பி.க்கள் உதவ வேண்டும். திறந்த மனதுடன் அனைத்தையும் விவாதித்து தேசத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி எம்.பிக்களிடம் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இன்று தொடங்கியது. குடியரசுத் தலைவர் உரை முடிந்ததும், நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார். 
அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 1ம்தேதி(நாளை) காலை 11 மணிக்கு மேல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அவர் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் இதுவாகும். 

Tap to resize

Latest Videos

undefined


குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரைக்கு முன்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் மோடி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. அனைத்து கட்சி எம்பி.க்களையும் நான் வரவேற்கிறேன். இன்றுள்ள உலகளாவிய சூழலில் இந்தியாவுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், தடுப்பூசி செலுத்திய அளவு ஆகியவை உலகளவில் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் திறந்த மனதுடன் அனைத்து விஷயங்களையும் விவாதிக்கலாம், உலகளாவிய தாக்கத்துக்கு இந்தவிவாதம் மிகவும் முக்கியமானது. அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் திறந்த மனதுடன் அனைத்து அம்சங்கள் குறித்தும் விவாதித்து தேசத்தைவளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வார்கள் என்று நான் நம்புகிறேன். 


5 மாநிலத் தேர்தல்கள் பட்ஜெட் கூட்டத்தொடரையும், விவாதங்களையும் பாதிக்கிறது. தேர்தல் ஒரு பக்கம் நடக்கட்டும். ஆனாலும், ஆண்டுமுழுவதும் நாம் செய்ய வேண்டியது குறித்த திட்ட அறிக்கையை பட்ஜெட்தான் வழங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை நாம் சுமூகமான முறையில் கொண்டு செல்ல வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடுத்துவரும் ஆண்டுகளில் சிறப்பாகக் கொண்டு செல்ல இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்
 

click me!