மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கும் TDS சலுகை வழங்கப்பட்டுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கும் TDS சலுகை வழங்கப்பட்டுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், அரசியல் ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், வேலை வாய்ப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
undefined
பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்;-
* மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கும் TDS சலுகை.
* மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர்களுக்கான TDS 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்படும்.
* கூட்டுறவு சங்கங்களுக்கான வரிகள் 15% ஆக குறைப்பு.
* 1000 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் கரீப், ராபி பருவ விளைபொருட்கள் வரும் நிதியாண்டில் கொள்முதல் செய்யப்படும், இது ஒருகோடி விவசாயிகளுக்கு பலன் அளிக்கும்.
* தொலைபேசி மூலம் கவுன்சிலிங் பெறும் வகையில் தேசிய மனநல சுகாதார திட்டம் தொடங்கப்படும்.
* பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் ரூ.48,000 கோடி, வரும் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டப்படவுள்ளன. ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு திட்டத்தின்கீழ் 60,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; 3.8 கோடி இல்லங்களுக்கு இணைப்பு வழங்கப்படவுள்ளது.
* மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 3 திட்டங்கள் அறிமுகம், சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம் மற்றும் ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகியவை துவக்கம்.
* பிட்காயின் போன்ற இந்தியாவின் டிஜிட்டல் கரன்சிக்கு மத்திய அரசு அனுமதி; ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் மற்றும் விதிமுறைகளின் கீழ் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும். டிஜிட்டல் கரன்சி மூலம் இனைய பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும்.
* ராணுவ தளவாட உற்பத்தியில் உள்நாட்டு தயாரிப்புகள் ஊக்குவிக்கப்படும்; ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் 68% நிதி உள்நாட்டு தயாரிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.