budget2022:farmers:2022- 23 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அது போல் கோதாவரி - பெண்ணாறு- காவிரி உள்ளிட்ட 5 நதிகள் இணைப்பு திட்டம் இறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2022- 23 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அது போல் கோதாவரி - பெண்ணாறு- காவிரி உள்ளிட்ட 5 நதிகள் இணைப்பு திட்டம் இறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலைக்காக 2.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3.8 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க 60,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்த கடந்த முறை ஒரு லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை வரும் ஆண்டில் 1000 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நிர்பாசன திட்டங்களுக்கு 44 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயம் மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கான தொடக்க நிலை நிதி அளிக்க நபார்டு மூலம் எளிதாக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டார அப்க்கள் கொண்ட விவசாய உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கப்படும் என்றும் விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப வசதி செய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விவசாய நிலங்களை அலவிடவும் விவசாய உற்பத்திய கண்காணிக்கவும் ட்ரொனகள் பயன்படுத்தப்படும்.
ரூ.44,605 கோடி மதிப்பிலான கெட்- பெட்வா இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.இதன் மூலம் 9 லட்சம் ஹெக்டருக்கு மேற்பட்ட விவசாய நிலம் பாசன வசதி பெறும். உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகள் வேளாண்மை,வாழ்வாதார வசதிகள் மேம்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இயற்கை முறையிலான விவசாயம் ஊக்குவிக்கப்படும்.அது போல் எண்ணெய் வித்துகள்,சிறு தானியங்கள் உற்பத்திக்கு முக்கியஹ்த்துவம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியிலான விஷியங்களில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
கோதாவரி - பெண்ணாறு- காவிரி உள்ளிட்ட 5 நதிகள் இணைப்பு திட்டம் இறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் ட்ரோன்களின் பயன்பாடு, பயிர் மதிப்பீடு, நிலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குதல், பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தெளித்தல் ஆகியவற்றிற்காக ஊக்குவிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட் 2022-23-ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.2021-22 ராபி பருவத்தில் கொள்முதலில் 163 லட்சம் விவசாயிகளிடமிருந்து 1208 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.