Budget 2022: Employment 5 ஆண்டுகளில் இத்தனை லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பா? வெளியான மாஸ் அறிவிப்பு.!

By vinoth kumar  |  First Published Feb 1, 2022, 1:06 PM IST

நாடாளுமன்றத்தில் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.  இளைஞர்கள், பெண்கள், ஏழை மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இது இருக்கும். அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


மேக் இன் இந்தியா திட்டம் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.  இளைஞர்கள், பெண்கள், ஏழை மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இது இருக்கும். அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்;- 

* இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.2 சதவீதமாக இருக்கும்; நடப்பாண்டுக்கான நிதி பற்றாக்குறை 6.9% அளவில் இருக்கும்; 2022-2023 இல் மூலதனச் செலவினங்களுக்கான செலவு 35.4% அதிகரித்து ரூ.7.50 லட்சம் கோடியாக உள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.9%

* மேக் இன் இந்தியா திட்டம் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்

* 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு

* தொடர் வளர்ச்சிக்கு உதவ 7 அம்சங்களில் பிரதமர் மோடியின் கதி சக்தி திட்டம்

* நாடு முழுவதும் இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படும். இதற்காக மாநில அரசுகள் மற்றம் சிறு-குறு- நடுத்தர தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று அறிவிக்கப்படும்; ரூ.44 ஆயிரம் கோடி மதிப்பில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்

* விவசாயிகளுக்கும், தொழில் துறையினருக்கும் உதவி புரியும் வகையில், ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

* ஏர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை வெற்றிகரமாக முடிந்தது. இனி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல் ஐ சி -யில் பங்குகள் விற்பனை விரைவில் தொடங்கும்,

*  ராணுவ தளவாட உற்பத்தியில் உள்நாட்டு தயாரிப்புகள் ஊக்குவிக்கப்படும். ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் 68% நிதி உள்நாட்டு தயாரிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

click me!