Budget 2022 :Digital Rupee: டிஜிட்டல் கரன்சி.. அரசின் நிதி பற்றாக்குறை 6.4%..பிட்காயின் வருமானத்திற்கு 30% வரி

By Thanalakshmi V  |  First Published Feb 1, 2022, 12:42 PM IST

பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 18 லட்சம் வீடுகள் கட்ட ரூ.48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.  ரிசர்வ் வங்கி சார்பில் டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 18 லட்சம் வீடுகள் கட்ட ரூ.48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.  ரிசர்வ் வங்கி சார்பில் டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குள் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் படி புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்.நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன் வாடி மையங்கள் மேம்படுத்தப்படும். நாட்டில் மாநில மொழிகளில் கல்வி ஊக்குவிக்கப்படும்.மாநிலங்களுக்கு 1 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்படும். மாநிலங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்களுக்கான குறைந்தபட்ச மாற்று வரி 15% சதவீதமாக குறைக்கப்படும். திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 2 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.நாட்டில் எந்தவொரு பகுதிகளிலிருந்தும் பத்திரபதிவு மேற்கொள்ள ஒரே நாடு, ஒரே பதிவுமுறை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.வரும் ஆண்டில் அரசின் செலவு ரூ.39.5 லட்சம் கோடியாக ஆக இருக்கும். மேலும் நாட்டின் வரவு 22.8 லட்சம் கோடி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் நிதி பற்றாக்குறை 6.4% ஆக குறையும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பிட்காயின் வருமானத்திற்கு 30% சதவீதம் வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

Latest Videos

undefined

நடப்பு நிதியாண்டில் 5ஜி அலைகற்றை ஏலம் விடப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கபட்டுள்ளது.2025 ஆம் ஆண்டுக்குள் கண்ணாடி ஒளியிழை குழாய் மூலம் அனைத்து கிராமங்களும் இணையவசதி செய்துத்தரப்படும். அனைத்து கிராமங்களையும் இ சேவை மூலம் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் மூலதன செலவீனங்களுக்கு ரூ.7.5 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 35.4% அதிகமாகும். பாதுகாப்பு படைக்கு தேவையான பொருட்களில் 68% சதவீதம் உள்நாட்டிலே கொள்முதல் செய்யப்படும். ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு 60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பாரத் நெட் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் இணைய வசதி செய்து தரப்படும்.

சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க 19,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.2025 ஆம் ஆண்டிற்க்குள் 280 கிலோ வாட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் தயாரிக்க இலக்கு செய்யப்பட்டுள்ளது. மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 3 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம்,ஊட்டச்சத்து 2.0 எனும் மூன்று திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 2022- 23 ஆண்டில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்க ரூ.2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

click me!