பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு நிதி பட்ஜெட்டில் குறைப்பு; உள்துறைக்கு கடந்த ஆண்டைவிட 11% அதிக ஒதுக்கீடு

By manimegalai a  |  First Published Feb 1, 2022, 6:07 PM IST

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் உள்நாட்டுப் பாதுக்காப்புக்கு அதிகமான முக்கியத்துவம் அளி்க்கும் வகையில் வரும் நிதியாண்டிலும் உள்துறைக்கு கூடுதல் நிதி பட்ஜெட்டில்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் உள்நாட்டுப் பாதுக்காப்புக்கு அதிகமான முக்கியத்துவம் அளி்க்கும் வகையில் வரும் நிதியாண்டிலும் உள்துறைக்கு கூடுதல் நிதி பட்ஜெட்டில்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில், உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.1.85 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.1.66,546 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் அதைவிட 11.5% அதிகமாக, அதாவது ரூ.20ஆயிரம் கோடி அதிகமாக ரூ.1,85,776 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

போலீஸ் துறையை நவீனப்படுத்துதல், உளவுத்துறையை வலுப்படுத்துதல், பெண்கள் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளி்க்கப்பட்டுள்ளது. கடந்த 2021-22 பட்ஜெட்டில் போலீஸ் துறைக்கு ரூ.1.09 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் 2022-23பட்ஜெட்டில் ரூ.1.17 லட்சம் கோடி கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

போலீஸ்துறையில் முக்கியமானதாக அதிலும் உள்நாட்டுப் பாதுகாப்பிலும், ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பில் பொறுப்பாக இருக்கும் சிஆர்பிஎப் பிரிவுக்கு பட்ஜெட்டில் ரூ.29,324.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.27,307 கோடி ஒதுக்கப்பட்டது.

எல்லைப் பாதுகாப்பு பிரிவு(பிஎஸ்எப்) நாட்டின் பாகிஸ்தான், வங்கதேச எல்லைப்பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றுகிறார்கள். இந்தப்பரிவுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.21,491 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2022-23 பட்ஜெட்டில் ரூ.22,718 கோடி ஒதுக்கப்பட்டது.

மத்திய தொழில்பிரிவு பாதுகாப்புப் படையினர் நாட்டின் அணுஉலை, விமானநிலையங்கள், மெட்ரோ ரயில்நிலையங்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு பட்ஜெட்டில் 12,201 கோடிஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு பட்ஜெட்டில் ரூ.11,372 கோடி ஒதுக்கப்பட்டது.
நேபாளம், பூடான் எல்லைகளை பாதுகாக்கும் சாஸ்த்ரா சீமாபால் படைப் பிரிவுக்கு வரும் பட்ஜெட்டில் ரூ,7653 கோடிஒதுக்கப்பட்டுள்ளது, நடப்பு பட்ஜெட்டில் ரூ.6,940 கோடி ஒதுக்கப்பட்டது.

இந்தோ-திபெத்தியன் எல்லைப் போலீஸார் அதாவது இந்திய-சீன எல்லையை காக்கும் இந்தப்  பிரிவினருக்கு ரூ.7,461 கோடி ஒதுக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் ரூ.6,965 கோடி ஒதுக்கப்பட்டது.

அசாம் ரைபிள் பிரிவினருக்கு ரூ.6,658 கோடியும், தேசிய பாதுகாப்பு பிரிவினருக்கு ரூ.1,293 கோடியும் ஒதுக்கப்பட்டது. புலனாய்வுப் பிரிவுக்கு பட்ஜெட்டில் ரூ.3,168 கோடிஒ துக்கப்பட்டது.

பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்புப் பிரிவினருக்கு நடப்பு பட்ஜெட்டில் ரூ.386.50 கோடி ஒதுக்கப்பட்டநிலையில் வரும் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.385.95 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தேசிய தலைநகர் டெல்லியின் பாதுகாப்புக்கு முக்கியமாக இருக்கும் டெல்லி போலீஸாருக்கு பட்ஜெட்டில் ரூ.10,096 கோடி ஒதுக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் ரூ.11,136 கோடி ஒதுக்கப்பட்டநிலையில் வரும் ஆண்டில் குறைக்கப்பட்டது.

பெண்கள் பாதுகாப்புக்கென ரூ.200 கோடி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. எல்லையில் கட்டமைப்பை மேம்படுத்துதலுக்காக ரூ.2,744 கோடியும், போலீஸ் பிரிவை நவீனப்படுத்த ரூ.2,754 கோடியும் ஒதுக்கப்பட்டது. போலீஸ் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.3,659.84 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

click me!