எல்பிஜி கேஸ் சிலிண்டர் மானியமாக, பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்துக்காக வரும் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது
எல்பிஜி கேஸ் சிலிண்டர் மானியமாக, பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்துக்காக வரும் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 2021-22ம் ஆண்டு பட்ஜெட்டில் எல்பிஜி மானியம் வழங்க ரூ.3,400 கோடிதான் ஒதுக்கிய நிலையில் அதைவிட சற்று கூடுதலாக ரூ.4 ஆயிரம் கோடி வரும் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
undefined
எல்பிஜி சிலிண்டர் மானியம் தேவை என்று கோரிய பயனாளிகளுக்கு ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கில் சந்தையில் நிலவும் விலைக்கு ஏற்ப சிலிண்டர் மானியத் தொகை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது.
ஆனால், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அதாவது 2020ம் ஆண்டு மே மாதத்திலிருந்து எல்பிஜி மானியம் எதையும் மத்திய அரசு பயனாளிகளுக்கு வழங்கவில்லை. சந்தையில் நிலவும் விலைக்கும், உற்பத்தி செலவுக்கும் இடைவெளி குறைந்துவிட்டதால், மானியம் ஏதும் வழங்காமல் இருந்தது. இதனால் பயணாளிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக சிலிண்டர் மானியத்தையும் அரசுசெலுத்தாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் வரும் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.4 ஆயிரம் கோடி மானியத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மண்டலங்களுக்கு கடந்த நிதியாண்டில் ரூ.391 கோடி மானியம் ஒதுக்கப்பட்ட நிலையில், வரும் நிதியாண்டில் ரூ.811 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து செலவு அதிகரித்ததன் காரணமாக பட்ஜெட்டில் மானியத்தின் அளவும் அதிகரித்துள்ளது.
பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக புதிய சிலிண்டர் ஒதுக்கீடு செய்யும் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டில் ரூ.1,618 கோடி நிதி உஜ்வாலா திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நாட்டில் உள்ள 99 சதவீத வீடுகளில் எல்பிஜி சிலிண்டர் பயன்பாடு வந்துவிட்டதால் பட்ஜெட்டில் தொகை குறைக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது