பட்ஜெட் 2022: உச்சமடையுமா ரியல் எஸ்டேட் துறை? வீடு வாங்குவோருக்கு என்னவிதமான சலுகைகள் இருக்கும்?

By manimegalai a  |  First Published Jan 31, 2022, 3:46 PM IST

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நாட்டின் ரியல் எஸ்டேட் துறை, கட்டுமானத்துறை பல சவால்களைச் சந்தித்து வருகிறது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் இந்தத் துறைக்கு சலுகைகள் கிடைக்காதா, வீடு வாங்குவோருக்கு சலுகைகளை அறிவித்து, ரியல் எஸ்டேட் துறையை அரசு கைதூக்கிவிடாதா என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
 


கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நாட்டின் ரியல் எஸ்டேட் துறை, கட்டுமானத்துறை பல சவால்களைச் சந்தித்து வருகிறது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் இந்தத் துறைக்கு சலுகைகள் கிடைக்காதா, வீடு வாங்குவோருக்கு சலுகைகளை அறிவித்து, ரியல் எஸ்டேட் துறையை அரசு கைதூக்கிவிடாதா என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இதேஎதிர்பார்ப்பு 2022-23 ஆண்டு பட்ஜெட்டிலும் எதிரொலித்துள்ளது.  பிப்ரவரி-1ம் தேதி(நாளை) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளார். அதில் ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கவும், வீடு வாங்கும் பிரிவினருக்கு சலுகைகள் குறித்தும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக எளிதாக கடன் பெறுதல், ஜிஎஸ்டி வரிக் குறைப்பு போன்றவை வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அது குறித்த விவரம்.

Tap to resize

Latest Videos

undefined

வீட்டுக்கடன் கழிவு உயர்வு

வீடு கட்ட வங்கியில் கடன் பெற்றிருக்கும் ஊதியம் பெறும் பிரிவினர், வீட்டுக்கடனுக்கான வட்டியில் ரூ.2 லட்சம் வரை பிரிவு-24ன் கீழ் வரித் தள்ளுபடி பெறலாம். இந்த வரித்தள்ளுபடி அளவை ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்படுமா என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதன்மூலம் கட்டிமுடிக்கப்பட்டு தேங்கிக் கிடக்கும்  வீடுகள் விற்பனை வேகமெடுக்கும், குறிப்பாக நடுத்தர பிரிவு மக்கள் வாங்குவதற்காக கட்டப்பட்ட வீடுகள் விற்பனை அதிகரிக்கும்

வீட்டுக் கடன் அசலைத் திருப்பிச் செலுத்துவதில் கழிவு

தனிநபர்கள்  வீட்டுக் கடன் பெற்றிருந்தால், அசலைத் திருப்பிச் செலுத்தும்போது, 80சி பிரிவில் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரை கழிவு தரப்படுகிறது. இந்த அளவு உயர்த்தப்படுமா என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தனிநபர் வருமானவரிக் குறைப்பு, வரிவிகித மாற்றியமைப்பு ஆகியவையும் எதிர்பார்க்கப்படுகிறது.

மலிவுவிலை வீடுகளுக்கான வரையறை மாற்றயமைக்கப்படுமா

நடுத்தர மக்கள், ஊதியம் பெறும் நடுத்தரப்பிரிவினர் வாங்கும் மலிவு விலை வீடுகள் ரூ.45 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரை அல்லது ரூ.ஒரு கோடிவரை  இருக்கும் வகையில் கொண்டுவரப் பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மலிவு விலை வீடுகள் மறுவரையறை செய்யப்படும்போது, அதிகமானோர் ஆர்வமாக வந்து வீடுகளை வாங்குவார்கள்.

இதர வரிச்சலுகைகள்

தற்போதுள்ள நிலையில் வீடுகட்டித்தரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தார் ஒட்டுமொத்தச் செலவில் கட்டுமானச் செலவுக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்தக்கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். 2022ம் ஆண்டு பட்ஜெட்டில், கட்டுமானச் செலவுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரிவிதிக்க அனுமதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது, இதன் மூலம் வீடுகள் விற்பனை அதிகரிக்கும்.

தொழில்துறை அங்கீகாரம்

ரியல் எஸ்டேட் துறையை தொழில்துறையாக அங்கீகரிக்க வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது. அந்த கோரிக்கை இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றப்படலாம். தொழிற்துறை அங்கீகாரம் ரியல் எஸ்டேட் துறைக்கு கிடைத்துவிட்டால், வங்கிகளிலும், நிதித்துறை நிறுவனங்களிலும் கடன் கிடைப்பது சுலபம் என்பதால் முன்னெப்போதும்இல்லாத வகையில் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது


 

click me!