Budget 2024 | பட்ஜெட் 2024-25 எதிரொலி! விலை குறையும் & அதிகரிக்கும் பொருட்கள்! முழு பட்டியல் இதோ!

By Dinesh TG  |  First Published Jul 23, 2024, 1:00 PM IST

Budget 2024 cheaper and costlier list | BJP தலைமையிலான NDA அரசாங்கத்தின் முதல் பட்ஜெட் இந்தியாவின் பொருளாதார நிலைமையை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025 நிதியாண்டிற்கான தனது 7வதுமத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதன் எதிரொலியாக பல்வேறு பொருட்கள் நுகர்வோருக்கு மலிவாகவும், விலை அதிகரித்தும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அவை எந்தெந்த பொருட்கள் என இங்கு காணலாம்.

2023 ஆண்டு பட்ஜெட்டின் போது, ​​இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சியில் கேமரா லென்ஸ்கள் உள்ளிட்ட பல்வேறு பாகங்கள் மீதான இறக்குமதி வரிகளை குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

தொலைபேசிகள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான அத்தியாவசிய கூறுகளான லித்தியம்-அயன் பேட்டரிகள் மீதான வரி விகிதத்தையும் நிதி அமைச்சர் குறைத்துள்ளார். இந்த கொள்கை மாற்றமானது, நிறுவனங்கள் இந்தியாவில் போன்களை உற்பத்தி செய்வதை அதிகரித்து விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை குறையும் பொருட்களின் பட்டியல் இதோ!

  • மொபைல் போன்கள், மொபைல் சார்ஜர்கள் மீதான வரி 15% சதவீதமாகக் குறைப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 6% சதவீதமாகவும், பிளாட்டினத்தின் மீது 6.4% சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
  • புற்றுநோய் சிகிச்சை மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • சோலார் பேனல்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் விலக்கு அளிக்கப்பட்ட மூலதனப் பொருட்களின் பட்டியலை விரிவுபடுத்தவும் பட்ஜெட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • இ-காமர்ஸ் மீதான TDS விகிதம் 1% சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதமாக குறைக்கபட்டுள்ளது.

மொபைல் போன்கள் விலை குறைகிறது.. பட்ஜெட்டில் வெளியான மஜாவான அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?
 

Tap to resize

Latest Videos

undefined


விலை அதிகரிக்கும் பொருட்களின் பட்டியல் இதோ!

  • அம்மோனியம் நைட்ரேட் மீதான சுங்க வரியை 10% சதவீதமாகவும்,
  • மக்காத பிளாஸ்டிக்குகளுக்கு 25% சதவீதமாகவும் உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது

மத்திய பட்ஜெட் 2024: நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களில் மாற்றம் என்ன?

click me!