மொபைல் போன்கள் விலை குறைகிறது.. பட்ஜெட்டில் வெளியான மஜாவான அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?

By Raghupati R  |  First Published Jul 23, 2024, 12:47 PM IST

மொபைல் போன்கள், பிசிபி மற்றும் சார்ஜர்கள் மீதான அடிப்படை சுங்க வரி குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


மொபைல் போன்கள், மொபைல் பிசிபிஏக்கள் மற்றும் மொபைல் சார்ஜர்கள் மீதான அடிப்படை சுங்க வரியை 15 சதவீதமாக குறைக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்மொழிந்துள்ளார். இன்று மத்திய அரசில் தாக்கல் செய்யப்பட்டுள்ள்ள பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அதன்படி, “கடந்த பல ஆண்டுகளாக மொபைல் துறை முதிர்ச்சியடைந்துள்ளது என்று கூறிய அவர், மொபைல் ஃபோன், பிசிபிஏ மற்றும் சார்ஜர் ஆகியவற்றில் பிசிடியை 15% ஆகக் குறைப்பது, M-SIPS, SPECS மற்றும் PLI திட்டங்கள் போன்ற பல நிதித் தலையீடுகள் மூலம் பயனடைந்த இந்திய மொபைல் போன் உற்பத்தி சூழல் அமைப்பின் உள்நாட்டு உற்பத்தித் திறனில் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

Latest Videos

உள்நாட்டு உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டலை ஊக்குவிப்பதற்காக, குறிப்பிட்ட தொலைத்தொடர்பு உபகரணங்களில் PCBA இல் BCDயை 10-15 சதவீதம் குறைக்க உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் 2024: நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களில் மாற்றம் என்ன?

click me!