மத்திய பட்ஜெட் 2024: ஆந்திரா, பீகாருக்கு அடித்த ஜாக்பாட்! கோடி கோடியாக வாரி கொடுத்த நிர்மலா சீதாராமன்!

By SG Balan  |  First Published Jul 23, 2024, 12:17 PM IST

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகாருக்கான அதிக நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்துள்ளார்.


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகாருக்கான அதிக நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்துள்ளார்.

பீகாரில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் மற்றும் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் என்.டி.ஏ. கூட்டணியில் உள்ளன. மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் இந்தக் கட்சிகள் தாங்கள் ஆட்சியில் இருக்கும் பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் அதிக நிதியைப் பெற்றுள்ளன.

Latest Videos

மக்களவையில் 2024-25 நிதி ஆண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர், "ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தில் உள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற எங்கள் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மாநிலத்தின் மூலதனத் தேவையை உணர்ந்து, பலதரப்பு முகமைகள் மூலம் சிறப்பு நிதி உதவியை வழங்கப்படும். நடப்பு நிதியாண்டில், 15,000 கோடி ரூபாய் வழங்கப்படும். வரும் ஆண்டுகளில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று அறிவித்தார்.

மத்திய பட்ஜெட் 2024: முத்ரா கடன் திட்டத்துக்கான நிதி ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு!

பீகார் மாநிலத்துக்கும் நிர்மலா சீதாராமன் சிறப்புத் திட்டங்களை அறிவித்தார். "அமிர்தசரஸ்-கொல்கத்தா தொழில்துறை வழித்தடத்தில், பீகாரில் உள்ள கயாவில் தொழில்துறையை மேம்படுத்துவதற்கு ஆதரவு அளிக்கப்படும்" என்றார். இந்த நடவடிக்கை கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என்று அவர் கூறினார்.

"சாலை இணைப்புத் திட்டங்களான பாட்னா - பூர்னியா விரைவுச் சாலை, பக்சர் - பாகல்பூர் நெடுஞ்சாலை, போத்கயா - ராஜ்கிர் - வைசாலி - தர்பங்கா மற்றும் பக்சரில் கங்கை ஆற்றின் மீது கூடுதலாக இருவழிப் பாலம் ஆகிய அமைக்க ரூ 26,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது" என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பீகாரில் கோசி ஆற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு உண்டாவது வாடிக்கையாக உள்ளது. இதனால் பீகாரில் இந்த வெள்ள பாதிப்பைக் குறைக்க வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக ரூ.11,500 கோடி ஒதுக்குவதாக என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

கயாவில் உள்ள விஷ்ணுபாத் கோயிலும், புத்த கயாவில் உள்ள மகாபோதி கோயிலும் உலகத் தரம் வாய்ந்த பாரம்பரியச் சின்னமாக மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

மத்திய பட்ஜெட் 2024: விவசாயத்துறைக்கு 1.52 லட்சம் கோடி! இயற்கை விவசாயத்தில் 1 கோடி இளைஞர்கள்!

click me!