பிட்காயின் முதலீட்டுக்கு செக் வைத்த நிர்மலா: போட்டியாக களமிறங்கும் ஆர்பிஐயின் டிஜிட்டல் ருப்பி

By manimegalai aFirst Published Feb 1, 2022, 2:00 PM IST
Highlights

கிரிப்டோ கரன்ஸி மீது முதலீடு செய்து வரியில்லாமல் ஒருதரப்பினர் வருமானத்தை பார்த்து வருவது அதிகரித்து வரும் நிலையில், அதில்நடக்கும் முறைகேடுகள், புகார்கள் இந்தியாவிலும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், அதனை ஒழுங்குபடுத்துவதற்கான கட்டுப்பாடுகள், விதிகள், சாட்டையை மத்திய அரசு எடுத்துள்ளது.

கிரிப்டோ கரன்ஸி மீது முதலீடு செய்து வரியில்லாமல் ஒருதரப்பினர் வருமானத்தை பார்த்து வருவது அதிகரித்து வரும் நிலையில், அதில்நடக்கும் முறைகேடுகள், புகார்கள் இந்தியாவிலும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், அதனை ஒழுங்குபடுத்துவதற்கான கட்டுப்பாடுகள், விதிகள், சாட்டையை மத்திய அரசு எடுத்துள்ளது.

வரும் 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில் பிட்காயின் பரிமாற்றத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும், பிட்காயினை யாருக்கேனும் பரிசளித்தால்கூட பரிசு பெறுவோருக்கு இறுதியாக வரிவிதிக்கப்படும் என்று செக் வைத்துள்ளார்.

இந்தியாவில் பிட்காயின் மூலம் முதலீடு செய்து சத்தமில்லாமல் வருமானம் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரிய அடியாக இறங்கியுள்ளது. பிட்காயின் மீதான முதலீடு என்பது இந்தியாவில் பெரிய பணக்காரர்கள் மட்டும்தான் செய்கிறார்கள் என்ற நிலை மாறி, நடுத்தரக் குடும்பத்தினர், உயர் நடுத்தரக் குடும்பத்தினர் கூட பிட்காயினில் முதலீடு செய்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது.

முதலில் கிரிப்டோகரன்ஸி என்றால் என்ன?

2009ல் சடோஷி நகமோடோ என்பவர் பிட்காயின் என்ற கிரிப்டோ கரன்ஸியை உருவாக்கினார். தற்போது பிட்காயினுக்குப்பின் பல கிரிப்டோகரென்சிகள் உருவாகி விட்டன. இவற்றை ஒருவகையில் fiat currency என்றும் அழைக்க முடியும். 

கிரிப்டோகரன்ஸி மீதான அச்சம் ஏன்

ஒவ்வொரு நாடும் தங்களுக்கென பணத்தை அச்சிடும், அதை தங்களின் இறையாண்மைக்குள், கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். ஆனால், இந்த கிரிப்டோகரன்ஸி யாருடைய கட்டுப்பாட்டுக்குள்ளும் வராது. இதன் மதிப்பை யாராலும் முடிவு செய்து கட்டுப்படுத்தவும்முடியாது. உலகம்முழுவதும் உள்ள செலவாணிகளின் மதிப்பு 80 லட்சம் கோடி டாலர்களாக இருக்கும் நிலையில், அறிமுகமாகி 12 ஆண்டுகளில் 3 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. 

ஆகவேதான் உலகம் முழுவதும் உள்ள அரசுகளிடம் இந்த கிரிப்டோகரன்ஸிகளை எதிர்கொள்வது குறித்த அச்சம் தொடர்ந்து நீடித்து வருகிறது. யாருடைய கட்டுப்பாட்டிலும் இயங்காத இந்த செலாவணியை ஏற்பது குறித்து எல்லா நாடுகளுமே தயக்கம் காட்டுகின்றன.

இந்தியாவில் தயக்கம் ஏன்

இந்தியாவைப் பொருத்தவரை கிரிப்டோகரன்ஸி பரிவர்த்தனைகளோ அதில் செய்யப்படும் முதலீடுகளோ அரசால் அங்கீகரிக்கப்பட்டவையல்ல. அரசின் எந்த கண்காணிப்பும் அமைப்பும் அதனைக் கண்காணிக்கவில்லை. இதில் முதலீடு செய்பவர்கள் தங்கள் சொந்த ரிஸ்க்கில்தான் முதலீடு செய்கிறார்கள். பிட்காயினின் விலை மிக அதிகமாக இருப்பதால், அதனை பகுதி பகுதியாக பிரித்து முதலீடுகளைச் செய்யும்வகையில் ஏராளமான விளம்பரங்கள் கடந்த சில ஆண்டுகளாக வந்தன.அதாவது  குறைந்தது ரூ.100 முதல் இந்த கிரிப்டோகரன்ஸிகளில் முதலீடு செய்யலாம் விளம்பரங்கள் வந்ததால் இந்தியர்களிடயே பெரிய மோகம் கிரிப்டோகரன்ஸி மீது எழுந்தது. 

அதேநேரம் கிரிப்டோகரன்ஸியில் முதலீடு செய்தும் இழப்பைச் சந்தித்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது.  இந்த நிலையில்தான் கிரிப்டோகரன்ஸியை ஒழுங்குபடுத்துவதன் அவசியம் குறித்து மத்திய அரசு உணரத் தொடங்கியது. இதுதொடர்பாக கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே சட்டம் கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியானநிலையில் அவ்வாறு ஏதும் வரவில்லை.

ஆனால், பட்ஜெட்டில் நிச்சயம் கிரிப்டோகரன்ஸியை கட்டுப்படுத்த விதிகள் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது அது நடந்துள்ளது.

30 சதவீதம் வரி
கிரிப்டோகரன்ஸி மீதான முதலீடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும், அதைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 2022-23ம் ஆண்டு நிதியாண்டிலிருந்து 30 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதாவது விர்ச்சுவல், டிஜிட்டல் கரன்ஸியை பரிமாற்றம் செய்தாலோ அல்லது அதிலிருந்து வருமானம் ஈட்டினாலோ 30 சதவீதம் வரிவிதிக்கப்படும். அதேநேரம் ஒருவருக்குபரிசாக கிரிப்டோ கரன்ஸியை வழங்கினாலும், அதைப் பெறுவோருக்குவரிவிதிக்கும்முறையை கொண்டு வந்துநிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்செக் வைத்துள்ளார். ஆனால், பிட்காயின் முதலீட்டுக்கு ஆகும் செலவுக்கு மட்டும் வரிவிலக்கு கேட்க முடியும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எத்தனை லட்சம் கோடி ரூபாய் இந்த கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறதென்பது யாருக்கும் தெரியாது. ரூ.3 லட்சம் கோடி முதல் 6 லட்சம் கோடி என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். வங்கிகளில் இருந்து ஒரு அளவுக்கு மேல் க்ரிப்டோ முதலீடுகளுக்குச் செல்வதை கட்டுப்படுத்தலாம். ஆனால் முற்றிலுமாக தடுக்க முடியுமா என்பது தெரியாது. 

ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் ருபி

பிட்காயின் மீதான மக்களுக்கு இருக்கும் மோகத்தைக் குறைக்கும் நோக்கில், ரிசர்வ் வங்கி சார்பில் 2022-23 ஆண்டு முதல் டிஜிட்டல் ருபி அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் ருபி அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிட்காயின் உள்ளிட்ட டிஜிட்டல் கரன்ஸிகள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 30 சதவீதம் வரிவிதிக்கும் மத்திய அரசு, ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தும் டிஜிட்டல் ருபிக்கு அதே வரிவிதிப்பு செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரிஸ்க் அதிகம் இழப்பும் அதிகம்

பொருளாதாரத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அறிவுரை வழக்கமாக வழங்கப்படும். ஒரு முதலீட்டாளர் எந்த அளவுக்கு பணத்தை இழக்கத் தயாராக இருக்கிறாரோ அந்த அளவுக்கு மட்டுமே அதில் முதலீடுசெய்ய வேண்டும் முதலீட்டாளர்கள் கவனம் கொள்ள வேண்டியது.


 கிரிப்டோகரன்ஸி விளம்பரங்களின் கீழே சிறிய எழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எச்சரிக்கை வாசகத்தைத்தான். க்ரிப்டோகரன்ஸிகள் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத டிஜிட்டல் சொத்துகள். சட்டபூர்வமாக எங்கும் பரிவர்ததனை செய்யத்தக்கதல்ல. முதலீடு செய்வதற்கு முன் கவனமாக இருங்கள் என எச்சரிக்கிறது

ஆனால், கிரிப்டோகரன்ஸி முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, குறைந்த காலகட்டத்தில் லாபம் சம்பாதிக்க சிறந்த வழி என்று நினைத்ததற்கு செக் வைக்கப்பட்டுள்ளது
 

click me!