Budget2022:Tax Reduction:எந்தெந்த பொருட்களுக்கு வரி குறைப்பு ..எவற்றிற்கெல்லாம் வரி உயர்வு..முழு தகவல்..

By Thanalakshmi V  |  First Published Feb 1, 2022, 2:15 PM IST

Budget2022:Tax Reduction:2022 - 2023 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் எந்தெந்த பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. எவற்றிற்கெல்லாம் வரி உயர்த்தப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.


நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில் சில வகை பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. சில வகை பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள முக்கிய அறிவிப்புகள்

*கார்ப்பேட் நிறுவனங்களான கூடுதல் 12% சதவீதத்திலிருந்து 7% சதவீதமாக குறைப்பு.

Tap to resize

Latest Videos

undefined

*வைரம் மற்றும் ஆபரண கற்களுக்கான இறக்குமதி வரி 5% சதவீதமாக ஆக குறைப்பு

*மொபைல் சார்ஜர் மற்றும் கேமிரா லென்ஸ் உள்ளிடவற்றின் உதிரிபாகங்களுக்கு இறக்குமதி வரிசலுகை அறிவிப்பு

*மொபைல் போன்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி வரி 7.5 சதவீதமாக குறைக்கப்படும் 

*இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் உபகரணங்களுக்கு வரி குறைக்கப்படும்.

*கூட்டுறவு சங்கங்களுக்கான கூடுதல் கட்டணம் 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்படும்.

*ஆடை தயாரிப்பு, தோல் பொருட்கள் தயாரிப்பு உபகரணங்களுக்கு வரி குறைக்கப்படும்.

*சுங்க வரியில் சீர்திருத்தங்கள் செய்யப்படும். நியாயமான கட்டணங்கள் தொழில் வளர்ச்சிக்கு உகந்தவை. 7.5% மிதமான வரி     என்ற திட்டம் இந்த பட்ஜெட்டில் முன்மொழியப்படுகிறது.

*இமிடேஷன் நகைகளுக்கான வரி மற்றும் முக்கியமான ரசாயனங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.

*வெட்டி எடுத்து பளபளப்பாக மாற்றப்படும் வைரத்தின் மீதான சுங்க வரி5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

*சோடியம் சயனைடு மீதான வரி உயர்த்தப்படுகிறது

*குடைகள் மீதான வரி 20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.சில வகை குடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்ட வரியும் திரும்பப்பெறப்படும்.

*ஸ்டீல் ஸ்கிராப்களுக்கு விதிக்கப்படும் வரி மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

*துருப்பிடிக்காத எஃகு மீதான வரி குறைப்பு திரும்பப் பெறப்படுகிறது.

*இறால் மீன் வளர்ப்பு தொடர்பான தொழில்களுக்கான சுங்க வரி குறைப்பு

click me!