பிக்பாஸ் வீட்டில் நடத்தப்பட்ட கேப்டன்சி டாஸ்க்கில் மாயா, கூல் சுரேஷ் மற்றும் விசித்ரா ஆகியோர் போட்டிபோட்டுள்ள புரோமோ வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வாரமும் அந்த வீட்டுக்கு கேப்டனாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இதற்காக டாஸ்க் வைத்து அதில் வெற்றி பெறும் போட்டியாளரே கேப்டனாக தேர்வு செய்யப்படுவார். அந்த வகையில் முதல் வாரம் விஜய் வர்மா கேப்டனாக இருந்தார். இரண்டாவது வாரம் சரவண விக்ரம் கேப்டன் ஆனார். மூன்றாவது வாரம் யுகேந்திரன் கேப்டனாக பதவி வகித்தார்.
இதையடுத்து இரண்டு வாரங்களும் கேப்டன்சி டாஸ்க்கில் வெற்றிபெற்று பூர்ணிமா தொடர்ந்து இரு வாரம் கேப்டனாக இருந்தார். கேப்டன் ஆவதன் பலம் என்னவென்றால், எந்த போட்டியாளர் கேப்டன் ஆகிறாரோ அவரை யாராலும் எலிமினேஷனுக்கு தேர்வு செய்ய முடியாது. அதோடு பிக்பாஸ் மற்றும் சுமால் பாஸ் என இரண்டு வீடுகளுக்கும் அவரால் சென்றுவர முடியும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
வழக்கமாக சனிக்கிழமை தான் கேப்டன்சி டாஸ்க் நடத்தப்படும், கமல்ஹாசன் எபிசோடு தொடங்கும் முன்னர் கேப்டன்சி டாஸ்க் நடைபெறும், ஆனால் இந்த வாரம் இன்றைய தினமே கேப்டன்ஸி டாஸ்க்கை நடத்தி உள்ளனர். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பூர்ணிமாவின் கேப்டன்சி டாஸ்க் பறிக்கப்பட்டதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அது உண்மையில்லை என்பது புரோமோ மூலம் தெரியவந்துள்ளது.
அடுத்த வாரத்திற்கான கேப்டனை தேர்வு செய்யும் டாஸ்க் தான் தற்போது நடைபெற்று உள்ளது. இந்த கேப்டன்சி டாஸ்கில் கூல் சுரேஷ், விசித்ரா, மாயா ஆகியோர் போட்டி போட்டு உள்ளனர். இதில் ஒரு காலை தரையில் படாமல் தூக்கிக் கொண்டு அதிக நேரம் யார் நிற்கிறார்கள் என்பதை வைத்தே கேப்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புரோமோவில் விசித்ரா நிற்க முடியாமல் வெளியேறும் காட்சியும், கூல் சுரேஷ் தடுமாறும் காட்சியும் இடம்பெற்றுள்ளதை பார்க்கும்போது மாயா தான் அடுத்த வார கேப்டனாக இருப்பார் என தெரிகிறது.
of
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/ZjYQYiKpqN
இதையும் படியுங்கள்... என்னடா ஸ்மோக்கிங் ரூம்ல ஒரே லிப்லாக் சத்தமா கேக்குது... பிக்பாஸ் வீட்ல இந்த கூத்து வேற நடக்குதா? வீடியோ இதோ