பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கி உள்ள கூல் சுரேஷ், அந்நிகழ்ச்சி பற்றி தரக்குறைவாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிம்பு மற்றும் சந்தானத்தின் உதவியால் சினிமாவில் காமெடி நடிகராக சில படங்களில் நடித்தவர் கூல் சுரேஷ். 20 ஆண்டுகளுக்கு மேலாக படங்களில் நடித்து வந்தாலும், இவரை பேமஸ் ஆக்கியது சிம்புவின் மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்கள் தான். இந்த படத்தில் அவர் நடிக்காவிட்டாலும், அதற்காக அவர் செய்த வித்தியாசமான புரமோஷன் கூல் சுரேஷை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆக்கியது.
தற்போது அடுத்தகட்டமாக கூல் சுரேஷுக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்துள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் முதல் போட்டியாளராக எண்ட்ரி கொடுத்ததே கூல் சுரேஷ் தான். வழக்கம்போல் தன்னுடைய பஞ்ச் வசனங்களால் பிக்பாஸ் வீட்டில் அலப்பறை செய்து வரும் கூல் சுரேஷ், படிப்படியாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். இதற்கு காரணம் பிக்பாஸ் பற்றிய அவரின் முந்தைய பேச்சுக்கள் தான்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பிக்பாஸுக்கு போகும் முன் ஒரு பேட்டியில் அவரிடம் பிக்பாஸ் பற்றி கேட்டபோது, பிக்பாஸ்னா என்ன, சின்ன சின்ன பொண்ணுங்கள கூட்டிட்டு வந்து காலைல பாட்டு போட்டவுடன் அறையும் குறையுமா ஆடவிடுவாங்க என்று கூறி இருக்கிறார். பிக்பாஸை பற்றி இப்படி தரக்குறைவாக பேசிய கூல் சுரேஷே தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளதை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
அதேபோல் மற்றொரு வீடியோவில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் நடிக்க என்ஜாய் என்கிற படத்தை தியேட்டரில் பார்க்க வந்த தற்போதைய பிக்பாஸ் போட்டியாளரான பூர்ணிமாவிடம் கார் பார்க்கிங்கில் எல்லைமீறி பேசிய வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் நீ பேசுன பேச்சுக்கு உன்னை வச்சு செய்ய தான் பிக்பாஸ் உனக்கு சான்ஸ் கொடுத்திருக்கிறார் என கூல் சுரேஷை ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்...அடுத்த அசீமா இருப்பாரோ... சண்டைக்கோழியாக மாறிய பிரதீப் - பிக்பாஸ் வீட்டில் வெடித்த மோதல்.. வீடியோ இதோ