பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பிரதீப் ஆண்டனி சாப்பாட்டுக்காக சண்டைபோடு புரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கு பஞ்சமிருக்காது. வழக்கமாக ஒரு வாரம் கழித்து தொடங்கும் சண்டை, இந்த சீசனில் முதல் வாரமே தொடங்கிவிட்டது. விசித்ரா மற்றும் யுகேந்திரன் பிக்பாஸ் விதிகளை மீறியதற்காக அவர்களை சுமால் பாஸ் வீட்டுக்கு செல்ல பிக்பாஸ் அறிவித்தபோது அங்கிருந்து இருவரை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டு வாக்குவாதம் செய்தார் பிரதீப். இதுகுறித்த காட்சிகள் முதல் புரோமோவில் இடம்பெற்று இருந்தது.
இந்நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது புரோமோவில், பிக்பாஸ் வீட்டின் கேப்டனான விஜய் வர்மாவுடன் பிரதீப் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. அதில் சாப்பாட்டுக்காக சண்டை போடுகிறார் பிரதீப். தன்னிடம் கேட்காமல் சப்பாத்தி, குருமா வைக்க ஏன் சொன்னீங்க என பிரதீப் கேட்க, நேற்று கலந்துரையாடும்போது நீ என்ன பண்ணிக்கிட்டு இருந்தப்போ சும்மா உட்கார்ந்து டவல் ஆட்டிக்கிட்டு இருந்தீங்கள அதனால உங்ககிட்ட கேட்க முடியாது என விஜய் வர்மா பதிலடி கொடுக்கிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
உடனே கோபத்தில் எழுந்து வரும் பிரதீப், சுமால் பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் தனக்கு இரவு உணவுக்கு சிக்கன் ஃபிரை வேண்டும் என கேட்கிறார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் நிக்சன், டீ, காபி ஸ்நாக்ஸ் மட்டும் தான் எப்போ கேட்டாலும் பண்ணிகொடுப்போம் என சொன்னதும், நான் வாங்கிட்டு வந்த சாமானுக்கெல்லாம் என்னிடம் பில் உள்ளது அதையெல்லாம் கொடுத்துவிடு எனக்கேட்டு சண்டை போட்டுள்ளார்.
இந்த புரோமோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள், இவரென்ன அடுத்த அசீமா இருப்பாரு போல என கமெண்ட் செய்து வருகின்றனர். கடந்த பிக்பாஸ் சீசனில் அசீமும் இதைப்போல் சண்டைக்கோழியாகவே வலம் வந்து இறுதியில் டைட்டிலை தட்டிச் சென்றார். பிரதீப்பும் அதை பாலோ செய்து டைட்டில் வின்னர் ஆக ஆசைப்படுவதாக நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.
of
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. " pic.twitter.com/PnnNVabVEX
இதையும் படியுங்கள்...ரூல்ஸை மீறிய விசித்ரா மற்றும் யுகேந்திரன்... அதிரடியாக வீட்டை விட்டு வெளியேற்றிய பிக்பாஸ் - ஷாக்கிங் புரோமோ