பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் ஏற்கனவே 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் ஒரே நேரத்தில் உள்ளே அனுப்பப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பேர் வர உள்ளார்களாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் வெற்றிகரமாக 50-வது நாளை எட்டி உள்ளது. 18 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் மாதம் 1-ந் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், கடந்த மாதத்தில் அனன்யா ராவ், பவா செல்லதுரை, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா ஆகியோர் எலிமினேட் ஆகினர். இதையடுத்து கடந்த மாத இறுதியில் அர்ச்சனா, கானா பாலா, தினேஷ், ஆர்.ஜே.பிராவோ, அன்ன பாரதி ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக உள்ளே வந்தனர்.
பின்னர் நவம்பர் மாத தொடக்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கருதி பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார் கமல். அதே வாரத்தில் அன்னபாரதியும் எலிமினேட் ஆனார். இதையடுத்து ஐஷூ, கானா பாலா ஆகியோர் எலிமினேட் ஆன நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டில் 14 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். இவர்களுக்கு இடையேயான போட்டியை மேலும் சூடுபிடிக்க வைக்க அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிக்பாஸ்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதன்படி பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்றை கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ள பிக்பாஸ், அதில் அதிரடியாக 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வர உள்ளதாகவும், அவர்களிடம் போட்டியிட்டு வென்றால் பிக்பாஸ் போட்டியாளர்கள் இதில் தொடர முடியும் என்றும், ஒருவேளை தோற்றுவிட்டால் வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கு வழிவிட்டு வெளியேற வேண்டும் என்று அறிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் பிக்பாஸ்.
பிக்பாஸ் கொடுத்துள்ள இந்த டாஸ்க்கில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் போட்டியாளர்கள் உள்ளனர். ஏற்கனவே வைல்டு கார்டு எண்ட்ரிக்கு பின்னர் பிக்பாஸ் வீட்டில் அதிகளவில் மோதல்கள் வெடித்து வந்த நிலையில், தற்போது மேலும் 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்தால் ஆட்டம் இன்னும் சூடுபிடிக்கும் என்பதால் இதில் யார் வெற்றிபெற உள்ளார்கள் என்பதை அறிய ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஆனால் இதில் பிரதீப் கம்பேக் கொடுக்கப்போவதில்லை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸை பதம் பார்த்த தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?