பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொண்டுள்ள பெண் போட்டியாளர்கள் சிலருக்கு மேக்கப் போட தடை விதித்துள்ளார் பிக்பாஸ்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. இதில் விசித்ரா, பூர்ணிமா, மாயா, ரவீனா, வினுஷா, அனன்யா, அக்ஷயா, ஜோவிகா, ஐஷூ ஆகிய 9 பெண் போட்டியாளர்கள், பிரவீன், விஷ்ணு, கூல் சுரேஷ், பவா செல்லதுரை, மணி சந்திரா, சரவண விக்ரம், யுகேந்திரன், நிக்சன், விஜய் வர்மா ஆகிய 9 ஆண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் முதல் வார நாமினேஷனில் ஐஷூ, பவா செல்லதுரை, அனன்யா, ரவீனா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, ஜோவிகா ஆகிய 7 பேர் இடம்பிடித்து உள்ளனர். இவர்களில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆக உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே டாஸ்க்குகள் அதிகளவில் இருக்கும். அந்த வகையில் தற்போது அவர்கள் மலிகை சாமான் வாங்கிய தொகையை திருப்பி செலுத்துவதற்கான ரீ பேமண்ட் டாஸ்க் ஒன்று நடத்தப்பட்டு உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த டாஸ்க்கின் பட வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்துகொள்ள வேண்டும், அவர்கள் ஏதேனும் பொருட்களை எடுத்துக்கொண்டு கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டுள்ள எடை மேடையில் நிற்க வேண்டும். அதில் பிக்பாஸ் கொடுத்துள்ள எடையை துல்லியமாக ரீச் செய்யும் அணி தான் வெற்றிபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த டாஸ்க்கில் தோல்வி அடையும் அணியினர் மேக்கப் போடக்கூடாது என்கிற நூதன தண்டனையும் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த போட்டியில் அக்ஷயா, மாயா, பூர்ணிமா ஆகியோர் இடம்பெற்ற அணி தோற்றுள்ளது. இதையடுத்து மேக்கப்பை கலைக்க பாத்ரூமில் குழுமிய அவர்கள் மூவரும், பிரதீப்பை பற்றி பேசிய காட்சிகள் புரோமோவாக வெளிவந்துள்ளன. இந்த போட்டியில் நீங்கள் தோற்றால் சந்தோஷம் தான் என பிரதீப் தன்னிடம் கூறியதாகவும், அப்போது தான் உங்களை மேக்கப் இல்லாமல் உண்மை முகத்தை பார்க்க முடியும் என சொன்னதாகவும் பூர்ணிமா கூறும் காட்சிகள் அந்த புரோமோவில் இடம்பெற்று உள்ளன.
of
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/eQ9sQfx0dr
இதையும் படியுங்கள்... முதல் கதையில் சிக்சர் அடித்துவிட்டு; அடுத்த கதையில் அவுட்டான பவா! இடுப்பை பற்றி பேசியதால் கடுப்பான ஹவுஸ்மேட்ஸ்