Bigg Boss Tamil 10 : தூத்துக்குடியில் இருந்து காமன்மேன் ஆக களமிறங்கிய தங்கமகன்... யார் இந்த ஜேசன்?

Published : Sep 06, 2026, 11:13 PM IST
Bigg Boss Tamil

சுருக்கம்

Bigg Boss Contestant Jason koushi : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் காமன்மேன் ஆக களமிறங்கி இருக்கிறார் ஜேசன் கவுஷி. அவரைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

யார் இந்த ஜேசன் கவுஷி?

பிக் பாஸ் தமிழ் 10 நிகழ்ச்சியில் காமன்மேன் ஆக எண்ட்ரி கொடுத்துள்ளார் ஜேசன் கவுஷி. பள்ளி, கல்லூரி மற்றும் தனது சொந்த ஊருக்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ள ஜேசன், தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியும் தேசிய அளவிலும் தனது திறமையை நிரூபித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜேசன் தற்போது அசோசியேட் டைரக்டராக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். சினிமா துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், தனது சொந்த திறமைகளையும் படைப்பாற்றலையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பிக் பாஸ் மேடைக்கு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

குவிந்த தங்கப் பதக்கங்கள்!

ஜேசனின் விளையாட்டு சாதனைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் டேக்வாண்டோவில் பல்வேறு பதக்கங்களை வென்றிருப்பது தெரியவந்தது. பள்ளி மற்றும் கல்லூரி அளவில் தொடங்கிய அவரது பயணம், பின்னர் தமிழ்நாடு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளிலும் தொடர்ந்துள்ளது. தமிழ்நாட்டுக்காக பல தங்கப் பதக்கங்களையும், தேசிய அளவில் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சர்வதேச அளவிலும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய அனுபவம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

“என்னை நானே அறிமுகப்படுத்த வேண்டிய நிலை”

இவ்வளவு சாதனைகளைப் பெற்றிருந்தும், ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தீர்கள் என்ற கேள்வி எழுந்தபோது ஜேசன் கொடுத்த பதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தான் பல விருதுகளை வென்றிருந்தாலும், தனது சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டிய சூழல் இருப்பதாகவும், அதற்காகவே இந்த மேடையை பயன்படுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். “என்னைப் பற்றி உங்களுக்கு தெரியவில்லை. அதனால்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்” என கூறினார்.

அவரிடம் சுவாரஸ்யமான கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டது. ஒரு போட்டியில் வெற்றி பெறுவதா அல்லது நேர்மையாக விளையாடுவதா முக்கியம் என்று கேட்கப்பட்டபோது, இரண்டுமே முக்கியம் என முதலில் பதிலளித்த ஜேசன், ஒன்றை மட்டும் தேர்வு செய்ய வேண்டுமென்றால் வெற்றியையே தேர்ந்தெடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற பிறகு தவறாக நடந்திருந்தால் மன்னிப்பு கேட்கலாம்; ஆனால் தோல்விக்கு காரணம் கூறுவது தனக்கு விருப்பமில்லை என்ற அவரது பதில், போட்டி குறித்த அவரது மனநிலையை வெளிப்படுத்தியது.

பல தங்கப் பதக்கங்கள், சினிமா மீதான ஆர்வம், கிரியேட்டிவ் துறையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் என வித்தியாசமான பின்னணியுடன் பிக் பாஸ் காமன் மேன் ஆக களமிறங்கியுள்ள ஜேசன் கவுஷி, பைனல் வரை செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bigg Boss Tamil 10 : பிக் பாஸில் அதகள எண்ட்ரி கொடுத்த கோமாளி... யார் இந்த அன்சர்?
Bigg Boss Tamil 10 : புன்னகையோடு பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற முனியம்மாவின் வலிகள் நிறைந்த வாழ்க்கை பற்றி தெரியுமா?