
Gana Vinoth troll vijay sethupathi : பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் 65 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி பைனலை நோக்கி சென்றாலும் இதில் யார் டைட்டில் வெல்வார்கள் என்பதை இதுவரை கணிக்க முடியவில்லை. ஆனால் இறுதிவரை செல்வார்கள் என்று ஒரு சில போட்டியாளர்களை சொல்லலாம். அந்த லிஸ்ட்டில் கானா வினோத், திவ்யா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதீன் ஆகியோர் இருக்கிறார்கள். இருப்பினும் இவர்களின் கேம் பிளே அடுத்தடுத்த வாரங்களில் மாறாமல் இருந்தால் மட்டுமே அவர்கள் பைனலுக்கு செல்ல முடியும்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் கொடுக்கப்படும். அந்த வகையில் இந்த வாரம் கோர்ட் டாஸ்க் நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி வழக்குகள் கொடுக்க வேண்டும். அது அங்கு வாதிடப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். கடந்த இரு தினங்களாக இந்த டாஸ்கில் சீரியஸான வழக்குகளை மட்டுமே வாதாடி வந்தனர். இதனால் ரசிகர்களே சற்று அப்செட் ஆகிப் போகினர்.
இதனால் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக இன்று ஜாலியான வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டு உள்ளது. அதில் சுபிக்ஷா பாட்டு பாடிக் கொண்டே இருப்பதால் காது வலிப்பதாக கூறி வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அப்போது நீதிமன்றத்தில் சுபிக்ஷாவுக்கு ஆதரவாக விஜே பார்வதி வாதிட்டார். இந்த வழக்கின் நடுவராக கானா வினோத் இருக்கிறார். இந்த வழக்கு விசாரணையின் போது சில காமெடியான சம்பவங்கள் நடந்துள்ளன.
குறிப்பாக சுபிக்ஷாவும், பார்வதியும் சேர்ந்து ஏல ஏல வால நீ வங்கக்கடலை ஆழ என பாடுகையில், கட்டிப்போடுங்க அவங்க கால என கவுண்டர் கொடுத்துள்ளார் வினோத். அதேபோல் இவர்கள் பாடுவதை பார்த்து காக்கா வலிப்பு வந்தது போது கம்ருதீன் அரோரா மீது சாய, அதைப்பார்த்த கானா வினோத், அவனை பசங்க பக்கத்துல உட்கார வச்சிருந்தா அவனுக்கு எதுவுமே ஆகாது என சொல்கிறார். இறுதியாக விஜய் சேதுபதியையும் விட்டுவைக்காத கானா வினோத், இந்த வீட்டில் உள்ளவர்களிடம் நீங்க நல்லா திறமையை வளர்த்துக்கோங்க என விஜய் சேதுபதி சொன்னதாக பார்வதி சொல்ல, அதற்கு ஜட்ஜ் ஆக உள்ள கானா வினோத், இங்க நடக்குற பிரச்சனை அவருக்கு தெரியல என பங்கமாக கலாய்த்துள்ளார்.