Bigg Boss Tamil 10 : பிக் பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸ் ஆக வந்த பெங்களூரு தமிழச்சி... யார் இந்த சாவின்யா?

Published : Sep 06, 2026, 11:35 PM IST
Bigg Boss Tamil

சுருக்கம்

Bigg Boss Contestant Savinya : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி இருக்கும் சாவின்யா என்பவரைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

யார் இந்த சாவின்யா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி செம கிராண்ட் ஆக தொடங்கி உள்ளது. வழக்கமாக இந்நிகழ்ச்சியில் வரும் போட்டியாளர்கள் தெரிந்த முகங்களாக இருக்கும். ஆனால் இந்த சீசனில் சில புது முகங்களும் பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்துள்ளனர். அவர்களில் ஒருவர் தான் சாவின்யா. இவர் பெங்களூருவில் வசிக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்து தன்னுடைய பெங்களூரு தமிழால் ரசிகர்களை கவர்வேன் என கூறிவிட்டு பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். அவரின் எண்ட்ரி யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது.

சாவின்யா மேடையில் பேசுகையில், பெங்களூரு தமிழில் பேசியதை பார்த்து விஜய் சேதுபதியே இம்பிரஸ் ஆனார். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது தான் பிக் பாஸின் டேக் லைன். அதற்கு ஏற்றார் போல் எதிர்பாராத ஒரு கண்டஸ்டண்ட் தான் இந்த சாவின்யா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவர் ஒரு மாடல் அழகி. இன்ஸ்டாவில் விதவிதமான ஆடைகள் அணிந்து போட்டோஷூட் நடத்தி அதனை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

சாதிக்க காத்திருக்கும் சாவின்யா

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் புகழ் வெளிச்சத்தை வைத்து நடிப்பிலும் சாதனை படைக்க காத்திருக்கிறார் சாவின்யா. வழக்கமாக பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன் மக்களை எண்டர்டெயின் பண்ணுவேன் என சொல்லிவிட்டு உள்ளே செல்லும் போட்டியாளர்கள் பலர் சொதப்பி இருக்கிறார்கள். அவர்கள் சொன்னதை செய்துகாட்டினால் நிச்சயம் பைனலுக்குள் சென்றுவிடுவார்கள். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ள சாவின்யா மக்கள் மனதில் இடம்பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதற்கு பெங்களூருவை சேர்ந்த மாடல் அழகியாக பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக வந்து சாதித்தவர் என்றால் அது நடிகை ரைசா வில்சன் தான். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக களமிறங்கினார். அந்த சீசனில் பைனல் வரை முன்னேறி அசத்தினார். அந்நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கி கலக்கினார் ரைசா. அதேபோல் சாவின்யாவும் கலக்குவாரா? இல்லை சொதப்புவாரா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Bigg Boss Tamil 10 : தூத்துக்குடியில் இருந்து காமன்மேன் ஆக களமிறங்கிய தங்கமகன்... யார் இந்த ஜேசன்?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bigg Boss Tamil 10 : தூத்துக்குடியில் இருந்து காமன்மேன் ஆக களமிறங்கிய தங்கமகன்... யார் இந்த ஜேசன்?
Bigg Boss Tamil 10 : பிக் பாஸில் அதகள எண்ட்ரி கொடுத்த கோமாளி... யார் இந்த அன்சர்?