மீண்டும் விலை உயர்வு... வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த டொயோட்டா...!

By Kevin Kaarki  |  First Published Jul 4, 2022, 11:39 AM IST

டொயோட்டா பார்ச்சூனர் எஸ்.யு.வி. டாப் எண்ட் மாடல் விலை தற்போது ரூ. 1 லட்தத்து 14 ஆயிரம் வரை அதிகரித்து உள்ளது. 


டொயோட்டா மோட்டார் நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் மாடல்களான பார்ச்சூனர் மற்றும் இன்னோவா க்ரிஸ்டா எம்.பி.வி. விலையை இந்திய சந்தையில் மீண்டும் உயர்த்தி இருக்கிறது. தற்போதைய விலை உயர்வை அடுத்து இன்னோவா க்ரிஸ்டா மாடலின் விலை ரூ. 85 ஆயிரமும், ஃபார்ச்சூனர் எஸ்.யு.வி. மாடலின் விலை ரூ. ஒரு லட்சமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

இதையும் படியுங்கள்: இணையத்தில் லீக் ஆன புகைப்படங்கள்... டி.வி.எஸ். ரோனின் இப்படி தான் இருக்குமாம்...!

Tap to resize

Latest Videos

முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் டொயோட்டா நிறுவனம் பார்ச்சூனர் மற்றும் இன்னோவா க்ரிஸ்டா மாடல்களின் விலையை உயர்த்தி இருந்தது. அப்போது பார்ச்சூனர் எஸ்.யு.வி. விலை ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. 

இதையும் படியுங்கள்: மொத்தம் ஆறு புது மாடல்கள்... பெரும் அதிரடிக்கு தயாராகும் ராயல் என்பீல்டு...!

டொயோட்டா பார்ச்சூனர் எஸ்.யு.வி. டாப் எண்ட் மாடல் விலை தற்போது ரூ. 1 லட்தத்து 14 ஆயிரம் வரை அதிகரித்து உள்ளது. இதன் பேஸ் மாடல்கள் விலை குறைந்த அளவிலேயே உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

இதையும் படியுங்கள்: எலெக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு ரூ. 3 லட்சம் தள்ளுபடி... அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்..!

புதிய விலை பட்டியல்:

டொயோட்டா பார்ச்சூனர் பெட்ரோல் ரூ. 32 லட்சத்து 40 ஆயிரம்
டொயோட்டா பார்ச்சூனர் டீசல் ரூ. 34 லட்சத்து 90 ஆயிரம்
டொயோட்டா பார்ச்சூனர் 4x4 ரூ. 38 லட்சத்து 54 ஆயிரம்
டொயோட்டா பார்ச்சூனர் லெஜண்டர் ரூ. 42 லட்சத்து 05 ஆயிரம்
டொயோட்டா பார்ச்சூனர் GR ஸ்போர்ட் ரூ. 49 லட்சத்து 57 ஆயிரம்

டொயோட்டா இன்னோவா  க்ரிஸ்டா டீசல் மேனுவல் ரூ. 18 லட்சத்து 90 ஆயிரம்
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா டீசல் ஆட்டோமேடிக் ரூ. 21 லட்சத்து 64 ஆயிரம்

உற்பத்தி செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மற்றும் பல்வேறு காரணங்களால் கார் மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் கார் மாடல்கள் விலை உயர்த்தப்படுவது குறித்து டொயோட்டா நிறுவனம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அப்போது இன்னோவா க்ரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் மாடல்களின் விலை முறையே ரூ. 36 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் உயர்த்தப்பட்டது. 

டொயோட்டா நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தான் இந்திய சந்தையில் தனது முதல் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை வெளியிட்டது. டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் என அழைக்கப்படும் புது காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷன் வடிவிலும் கிடைக்கிறது. புதிய எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற மாடல்களுக்கு  காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் போட்டியாக அமைகிறது. 

click me!