2.5 ஆண்டுகள் காத்திருந்தும் பலனில்லை... இந்தியாவுக்கு 'பை பை' சொல்லும் சீன நிறுவனம்...!

By Kevin Kaarki  |  First Published Jul 3, 2022, 6:26 PM IST

புனேவில் உள்ள ஜி.எம். இந்தியா நிறுவனத்தின் தலேகான் ஆலையை கைப்பற்ற ஜி.எம். நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது.


சீனாவில் முன்னணி வாகன உற்பத்தியாளரான கிரேட் வால் மோட்டார் இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் களமிறங்கிய நிலையில், தற்போது இந்திய சந்தையில் இருந்து வெளியேற முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கிரேட் வால் மோட்டார் நிறுவனத்தின் முதல் மாடலாக ஹவல் எப்7 பிரீமியம் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்தது. 

எலெக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு ரூ. 3 லட்சம் தள்ளுபடி... அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்..!

Latest Videos

சர்வதேச சந்தையில் ஹவல் எப்7 மாடல் மிகவும் பிரபலமானது ஆகும். பல்வேறு நாடுகளில் அதிக தட்டுப்பாடு கொண்ட மாடலாக ஹவல் எப்7 இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று மற்றும் இந்தியா, சீனா இடையேயான உறவில் ஏற்பட்டு இருக்கும் விரிசல் காரணமாக இந்திய எண்ட்ரியை ஒத்தி வைக்கும் முடிவை கிரேட் வால் மோட்டார் எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டொயோட்டா ஹைரைடர் vs மாருதி பிரெஸ்ஸா? அம்சங்கள், விலை, முழு விவரங்கள்...!

முன்னதாக புனேவில் உள்ள ஜி.எம். இந்தியா நிறுவனத்தின் தலேகான் ஆலையை கைப்பற்ற ஜி.எம். நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி கோரி ஜி.எம். நிறுவனங்கள் பல முறை திருத்தம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பித்து வந்தது. எனினும், இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக ஜி.எம். நிறுவனம்  ரூ. 7 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீட்டை ரத்து செய்ய முடிவு செய்து உள்ளது.

எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை திடீரென நிறுத்திய பி.எம்.டபிள்யூ. - ஏன் தெரியுமா?

கடந்த 2.5 ஆண்டுகளாக முயற்சி செய்து வந்த நிலையில், ஜி.எம். நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் வெளியேறும் முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஜி.எம். ஆலையை கைப்பற்றுவதற்கான டெர்ம் ஷீட் ஜூன் 30, 2022 தேதியுடன் நிறைவு பெற்றது. முன்னதாக மார்ச் மாத வாக்கில் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவன பிராடக்ட் பிரிவு இயக்குனர் கௌஷிக் கங்குலி தனது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார்.

இவர் தான் இந்தியாவில் முதல் முறையாக 2018 ஆம் தேதி பணியமர்த்தப்பட்டார். இந்திய சந்தையில் களமிறங்குவது பற்றிய முடிவு எடுத்த பின் மூத்த ஊழியராக பணியில் சேர்ந்தார். இவர் மட்டும் இன்றி கிரேட் வால் மோட்டார்ஸ் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு இயக்குனராக இருந்த ஹர்தீப் பிரார் தனது பதவியை ராஜினாமா செய்து கியா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். ஆலையை கைப்பற்றும் முடிவு ரத்தானதை தொடர்ந்து 11 ஊழியர்களும் பணியில் இருந்து விலகிக் கொள்ள கிரேட் வால் மோட்டார்ஸ் அனுமதி அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்திய சந்தையில் ஹெச்9, எப்7, எப்7 எக்ஸ், ஹெச் கான்செப்ட், எப்5, விஷன் 2025 கான்செப்ட் மற்றும் ஆர் 1 எலெக்ட்ரிக் கார் என பல்வேறு மாடல்களை 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்து இருந்தது. அதன் படி இந்திய சந்தையில் அதிக மாடல்களை அறிமுகம் செய்ய சீன நிறுவனமான கிரேட் வால் மோட்டார்ஸ் முடிவு செய்து இருந்தது. 

click me!