இந்த திட்டம் எவ்வளவு காலம் அமலில் இருக்கும் என்ற விவரங்களை ஹரியானா மாநில அரசு வெளியிட்டு உள்ளது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், தற்போது ஹரியானா மாநிலம் புதிதாக இணைந்து இருக்கிறது.
டொயோட்டா ஹைரைடர் vs மாருதி பிரெஸ்ஸா? அம்சங்கள், விலை, முழு விவரங்கள்...!
ஹரியானா மாநில அரசு ஒப்புதல் அளித்து இருக்கும் புது திட்டத்தின் படி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஏராளமான சலுகை மற்றும் பலன்களை பெற முடியும். இந்த திட்டம் எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டும் இன்றி ஹைப்ரிட் வாகனங்களை வாங்குவோருக்கும் பொருந்தும்.
எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை திடீரென நிறுத்திய பி.எம்.டபிள்யூ. - ஏன் தெரியுமா?
15 சதவீதம் தள்ளுபடி:
புதிய திட்டத்தின் படி ரூ. 70 லட்சம் மதிப்புள்ள எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகபட்சமாக 15 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே போன்று ரூ. 40 லட்சத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் ஹைப்ரிட் மாடல்களுக்கு ரூ. 3 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும். இதன் காரணமாக ரூ. 20 லட்சம் பட்ஜெட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மற்றும் டாடா நெக்சான் EV மேக்ஸ் போன்ற மாடல்களை வாங்குவோர் ரூ. 3 லட்சம் வரையிலான தள்ளுபடி பெற முடியும்.
மணிக்கு 275 கி.மீ. வேகம்... எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் உருவாக்கும் டுகாட்டி...!
இந்த திட்டம் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு பயன்தரும் வகையில் உள்ளது. மேலும் இந்த திட்டம் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் எவ்வளவு காலம் அமலில் இருக்கும் என்ற விவரங்களை ஹரியானா மாநில அரசு வெளியிட்டு உள்ளது. இந்த திட்ட பலன்கள் ஏற்கனவே அந்த மாநிலத்தில் அமலில் இருக்கும் பேம் 2 பலன்களை சேர்த்தே வழங்கப்படுகிறது.
உதாரணத்திற்கு ரூ. 15 லட்சத்திற்கும் அதிக விலையில் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை வாங்க திட்டமிடும் பட்சத்தில் இந்த திட்டத்தின் கீழ் பலன்களை பெற முடியும். இந்திய சந்தையில் டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலின் டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ. 17 லட்சத்து 40 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 15 சதவீதம் அதாவது ரூ. 2 லட்சத்து 60 ஆயிரம் வரை சேமிக்க முடியும்.
ரூ. 10 லட்சம் தள்ளுபடி:
அதன் படி டாடா நெக்சான் EV மேக்ஸ் டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 14 லட்சதத்து 79 ஆயிரம் என குறைந்து விடும். இது மட்டும் இன்றி எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் மோட்டார் வாகன வரி மற்றும் பதிவு கட்டணங்களில் முழு தள்ளுபடி பெற முடியும். ரூ. 15 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 40 லட்சம் வரையிலான எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ. 6 லட்சம் வரை தள்ளுபடி பெற முடியும்.
இதற்கும் அடுத்தப்படியாக ரூ. 40 லட்சம் முதல் ரூ. 70 லட்சம் வரை விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார் வாங்கும் போது ரூ. 10 லட்சம் வரையிலான தள்ளுபடி பெற முடியும். அதிக விலை கொண்ட கார்களை இறக்குமதி செய்யும் போது செலுத்தும் வரியை இந்த சலுகை மூலம் சமன் செய்து கொள்ளலாம்.