முதலில் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதன் பின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் 2013 வாக்கில் அறிமுகமானது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது i3 மாடல் உற்பத்தியை நிறுத்தி விட்டது. i3 மாடல் பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் முதல் முழுமையான எலெக்ட்ரிக் கார் ஆகும். இதுவரை மொத்தம் 2.5 லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு தான் பி.எம்.டபிள்யூ i3 மாடலின் கடைசி யூனிட் லெய்பிங் ஆலையில் இருந்து வெளியிடப்பட்டு இருந்தது.
இதையும் படியுங்கள்: மணிக்கு 275 கி.மீ. வேகம்... எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் உருவாக்கும் டுகாட்டி...!
i3 மாடலின் உற்பத்தி நிறுத்தப்படுவதை ஒட்டி பி.எம்.டபிள்யூ நிறுவனம் அல்ட்ரா லிமிடெட் ஹோம் ரன் எடிஷன் உருவாக்கப்பட்டது. இந்த லிமிடெட் எடிஷன் மொத்தத்தில் பத்து யூனிட்களே உற்பத்தி செய்யப்பட்டன. இந்த காரில் பி.எம்.டபிள்யூ. இண்டிவிஜூவல் ஃபுரோஸன் பெயிண்ட் - டார்க் கிரே மற்றும் ஃபுரோஸன் ரெட் II பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.
இதையும் படியுங்கள்: புது பிரெஸ்ஸா வாங்க போறீங்களா? இதை தெரிஞ்சுகோங்க....!
எலெக்ட்ரிக் சூப்பர் மினி:
இத்துடன் புதிய ஹோம்ரன் எடிஷனில் 20 இன்ச் லைட் அலாய் வீல்கள், டபுள் ஸ்போக் டிசைன், எலெக்ட்ரிக் கிளாஸ் ரூஃப், சோலார் கண்ட்ரோல் மற்றும் அடாப்டிவ் எல்.இ.டி. ஹெட்லைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 2011 ஆம் ஆண்டு இந்த எலெக்ட்ரிக் சூப்பர் மினி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதன் பின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் 2013 வாக்கில் அறிமுகமானது.
இதையும் படியுங்கள்: வேற லெவல் அம்சங்கள்... சக்திவாயந்த என்ஜினுடன் அறிமுகமான டொயோட்டா கார்..!
பியுர் இ.வி. மாடல் மட்டும் இன்றி பி.எம்.டபிள்யூ. i3 மாடல் பிரத்யேகமான ரேன்ஜ் எக்ஸ்டெண்டர் வெர்ஷனை கொண்டுள்ளது. இதில் இரண்டு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை காரை ஓட்டும் போது வீல்களில் இருந்து பேட்டரிகளை சார்ஜ் செய்யும். i3 மாடல் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் CRPF கொண்டு பாடி ஷெல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பி.எம்.டபிள்யூ. எலெக்ட்ரிக் பவர்டிரெயினில் இது முதல் முறையாக வழங்கப்பட்டு இருந்தது. இதன் கேபினில் அதிகளவு மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு இருந்தது.
இந்திய விற்பனை:
உலகம் முழுக்க சுமார் 74 நாடுகளில் i3 மாடல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. எனினும், இந்த மாடல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படவில்லை. லெய்பிங் ஆலையில் தற்போது இ டிரைவ் உபகரணங்கள் உற்பத்தி செய்யப்பட பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த ஆலையில் முதல் முறையாக பி.எம்.டபிள்யூ. மற்றும் மினி மாடல்களின் உற்பத்தி முதல் முறையாக நடைபெற உள்ளது.
தற்போது பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. மேலும் பல்வேறு புது எலெக்ட்ரிக் கார்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.