புது மாருதி சுசுகி பிரெஸ்ஸா வாங்க போறீங்களா? இதை தெரிஞ்சுகோங்க....!

By Kevin KaarkiFirst Published Jul 2, 2022, 6:47 PM IST
Highlights

அதீத வரவேற்பு காரணமாக இதன் உற்பத்தி பணிகளை வேகப்படுத்தும் முயற்சிகளில் மாருதி சுசுகி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 

இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா எண்ட்ரி லெவல் மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் ஆட்டோமேடிக் மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 96 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களுக்குள் 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலை வாங்க சுமார் 46 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து உள்ளனர். இந்த தகவலை மாருதி சுசுகி நிறுவன மூத்த இணை இயக்குனற் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த காரை டெலிவரி பெற வாடிக்கையாளர்கள் நான்கு மற்றும் அரை மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.

இதையும் படியுங்கள்: வேற லெவல் அம்சங்கள்... சக்திவாயந்த என்ஜினுடன் அறிமுகமான டொயோட்டா கார்..! 

புதிய 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலுக்கு கிடைத்து இருக்கும் அதீத வரவேற்பு காரணமாக இதன் உற்பத்தி பணிகளை வேகப்படுத்தும் முயற்சிகளில் மாருதி சுசுகி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் LXi, VXi, ZXi மற்றும் ZXi+ என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

இதையும் படியுங்கள்: விற்பனையில் மாஸ் காட்டிய ஏத்தர் எனர்ஜி... ஒரே மாதத்தில் இத்தனை யூனிட்களா?

இந்த மாடலில் 15 லிட்டர் K15C பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்.பி. பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் லிட்டருக்கு 20.15 கி.மீ. மைலேஜ் வழங்குகிறது. இதன் ஆட்டோமேடிக் வேரியண்ட் லிட்டருக்கு 19.80 கி.மீ. மைலேஜ் வழங்கும்.

இதையும் படியுங்கள்: எல்.சி.டி. கன்சோல் கொண்ட டி.வி.எஸ். ரேடியான் - ரூ. 59 ஆயிரம் விலையில் அறிமுகம்..!

பெட்ரோல் மாடலை தொடர்ந்து 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலின் சி.என்.ஜி. வேரியண்ட் அறிமுகம் செய்யப்படும் என மாருதி சுசுகி அறிவித்து விட்டது. இந்த மாடல் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம். சுசுகி கனெக்ட் மூலம் ஏராளமான கனெக்டெட் அம்சங்கள், 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, லெதர் மூலம் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், ஆம்பியன்ட் லைட்டிங், ஆர்கமிஸ் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், 9 இன்ச் தொடுதிரை வழங்கப்பட்டு இருக்கிறது.

அம்சங்கள்:

இத்துடன் ஸ்மார்ட் பிளே ப்ரோ பிளஸ் சாப்ட்வேர், வயர்லெஸ் சார்ஜிங், கூல்டு கிளவ் பாக்ஸ், ரியர் பாஸ்ட் சார்ஜிங் யு.எஸ்.பி. ஸ்லாட்கள், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற சீட் பெல்ட்கள், 6 ஏர்பேக் வழங்கப்பட்டு உள்ளது. 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி ப்ரோகிராம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரியர் பார்கிங் சென்சார் வழங்கப்பட்டு உள்ளது.

புதிய பிரெஸ்ஸா மாடலின் ZXi மற்றும் ZXi+ வேரியண்ட்கள் டூயல் டோன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதற்கு கூடுதலாக ரூ. 16 ஆயிரம் வரை செலவாகும். இந்த ஆப்ஷன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை காக்கி & வைட், சில்வர் & பிளாக் மற்றும் ரெட் & பிளாக் ஆகும். இந்த மாடல் ஸ்பிலெண்டிங் சில்வர், பிரேவ் காக்கி, மேக்மா கிரெ மற்றும் எக்சுபிரெண்ட் புளூ என நான்கு புது நிறங்களில் கிடைக்கிறது.

click me!