விற்பனையில் மாஸ் காட்டிய ஏத்தர் எனர்ஜி... ஒரே மாதத்தில் இத்தனை யூனிட்களா?

By Kevin KaarkiFirst Published Jul 2, 2022, 5:10 PM IST
Highlights

இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றாக ஏத்தர் எனர்ஜி இருக்கிறது. 

ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனை ஜூன் மாதம் அமோக வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. ஒவ்வொரு எலெக்ட்ரிக் வாகன விற்பனையாளரின் வாகன விற்பனையை வைத்து இதனை எளிதில் புரிந்து கொள்ள முடியும். 

இதையும் படியுங்கள்: எல்.சி.டி. கன்சோல் கொண்ட டி.வி.எஸ். ரேடியான் - ரூ. 59 ஆயிரம் விலையில் அறிமுகம்..!

இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றாக ஏத்தர் எனர்ஜி இருக்கிறது. இந்த நிறுவனம் 2022 ஜூன் மாதத்திற்கான வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது. வருடாந்திர விற்பனையில் கடந்த மாதம் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் பல மடங்கு வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. 

இதையும் படியுங்கள்: மலிவு விலையில் புது எலெக்ட்ரிக் கார் உருவாக்கும் எம்ஜி மோட்டார் - வெளியான ஸ்பை படங்கள்..!

மாதாந்திர விற்பனை:

2022 ஜூன் மாதத்தில் மட்டும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 3 ஆயிரத்து 231 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஏத்தர் நிறுவனம் 300 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில், கடந்த மாத விற்பனையில் ஏத்தர் எனர்ஜி சுமார் ஒன்பது மடங்கு வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. 

இதையும் படியுங்கள்: ரூ. 72 லட்சம் விலையில் பி.எம்.டபிள்யூ. ஸ்பெஷல் எடிஷன் கார் அறிமுகம்... என்னென்ன அம்சங்கள் தெரியுமா?
 

வாகன விற்பனை மட்டும் இன்ற் ஏத்தர் நிறுவனம் விரைவில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஏத்தர் 450X மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. அப்டேட் செய்யப்படுவதால், இந்த மாடலில் அதிக திறன் கொண்ட பேட்டரி, ஓரளவு காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்க முடியும். 

புது அம்சங்கள் மற்றும் ரேன்ஜ்:

தற்பமயம் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஏத்தர் 450X மாடலில் 2.6 கிலோவாட் ஹவர் பேட்டரி யூனிட் மற்றும் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலுடன் ஏத்தர் 450 பிளஸ் மாடலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் முறையே 116 கி.மீ. மற்றும் 100 கி.மீ. ரேன்ஜ் வழங்கி வருகின்றன. விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஏத்தர் ஸ்கூட்டரில் அதிக ரேன்ஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஏத்தர் நிறுவனம் தற்போது உருவாக்கி வரும் புதிய மேம்பட்ட மாடல் ARAI சான்று பெற்று இருப்பதாக சில தினங்களுக்கு முன் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதன் மூலம் புது மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான அனுமதியை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் பெற இருப்பதாக கூறப்பட்டது. இந்த ஸ்கூட்டர் அதிக டிரைவிங் மோட்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

மேம்பட்ட ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் நீண்ட ரேன்ஜ், அதிக ரைடிங் மோட்கள் மட்டும் இன்றி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

click me!