மொத்தம் ஆறு புது மாடல்கள்... பெரும் அதிரடிக்கு தயாராகும் ராயல் என்பீல்டு...!

By Kevin Kaarki  |  First Published Jul 3, 2022, 8:04 PM IST

ராயல் என்பீல்டு மேலும் பல்வேறு புது மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.


ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு புது மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இவற்றில் சில மாடல்கள் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே அதிக எண்ணிக்கையில் புது மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

2.5 ஆண்டுகள் காத்திருந்தும் பலனில்லை... இந்தியாவுக்கு 'பை பை' சொல்லும் சீன நிறுவனம்...!

Tap to resize

Latest Videos

கடந்த ஆண்டு அதிக அளவில் மாற்றங்களை செய்து முற்றிலும் புதிய கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. அதற்கும் முன்பு மீடியோர் 350 மாடலை தண்டர்பேர்டு மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்தது. இந்த வரிசையில், ராயல் என்பீல்டு மேலும் பல்வேறு புது மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இவை எந்தெந்த மாடல்கள் என தொடர்ந்து பார்ப்போம்.

எலெக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு ரூ. 3 லட்சம் தள்ளுபடி... அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்..!

1- ஹண்டர் 350:

இந்திய சந்தையில் பல முறை இந்த மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய தகவல்களின் படி இந்த மோட்டார்சைக்கிள் 350-சிசி கொண்ட ரோட்ஸ்டர் மாடல் என்று மட்டும் தெரிகிறது. இது J1C1 பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா ஹைரைடர் vs மாருதி பிரெஸ்ஸா? அம்சங்கள், விலை, முழு விவரங்கள்...!

2 - புல்லட் 350:

கடந்த ஆண்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மட்டும் அப்டேட் செய்யப்பட்டது. எனினும், புல்லட் 350 மாடலுக்கு எந்த அப்டேட்டும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக ராயல் என்பீல்டு நிறுவனம் விரைவில் புல்லட் 350 மோட்டார்சைக்கிளை அப்டேட் செய்யும் என எதிர்பார்க்கலாம். இந்த மாடலில் கிளாசிக் 350 மற்றும் மீடியோர் 350 போன்ற மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் என்ஜினே வழங்கப்படும். 

3 - ஹிமாலயன் 450:

பல்வேறு புது மாடல்களுடன் ராயல் என்பீல்டு நிறுவனம் தனது முந்தைய மாடல்களை அப்கிரேடு செய்யவும் திட்டமிட்டு உள்ளது. அந்த வகையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிரபலமான அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் ஹிமாலயனை தழுவி புது மாடலை உருவாக்கி வருகிறது. இந்த மாடலும் புது பிளாட்பார்ம் மற்றும் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது. 

4 - ஷாட்கன் 650 ரோட்ஸ்டர்:

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மற்றும் ஓர் 650 மோட்டார்சைக்கிள் என்ற பெருமையுடன் ஷாட்கன் மாடல் உருவாகி வருகிறது. இந்த மாடலின் ஸ்பை படங்களும் பல முறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. ரோட்ஸ்டர் போன்ற தோற்றம் கொண்டு இருக்கும் ஷாட்கன் மாடலில் சூப்பர் மீடியோர் மாடலில் வழங்கப்பட்ட என்ஜினே வழங்கப்பட இருக்கிறது. இந்த மாடல் ரோட்ஸ்டர் மட்டும் இன்றி பாபர் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படலாம். 

5 - ராயல் என்பீல்டு KX பாபர்:

ராயல் என்பீல்டு நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்து இருந்த KX பாபர் மாடலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய KX பாபர் மாடல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பெரிய என்ஜின் கொண்ட ராயல் என்பீல்டு மாடல் என்ற பெருமையை பெறும் என தெரிகிறது. இதில் 838 சிசி, வி டுவின் என்ஜின் வழங்கப்படுகிறது. இது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் மாடலாக இருக்கும். 

click me!