Toyota Fortuner : இந்திய சந்தையில் கடந்த பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் கார் தயாரிப்பு நிறுவனம் தான் Toyota. அந்த நிறுவனம் கடந்த 2009ம் ஆண்டு வெளியிட்ட கார் தான் Fortuner.
நடமாடும் ரதம் என்று சில கார்களை நம்மால் வரிசைப்படுத்த முடியும், அந்த வகையில் TATA நிறுவனத்தின் Sierra, Safari போன்ற கார்களின் வரிசையில் பிரபல Toyota நிறுவனம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட மாடல் தான் Fortuner. இந்த 15 ஆண்டுகளில் பல்வேறு மக்களின் கனவு காராக அது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்துவரும் டொயோட்டா கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தனது மிகச் சிறந்த கார்களில் ஒன்றான Fortuner, எத்தனை யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளது என்பதை குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டிருக்கிறது. அதன்படி இந்திய அளவில் சுமார் 2,51,000 ஃபார்ச்சூனர் கார்களை கடந்த 15 ஆண்டுகளில் அந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
undefined
இந்த அருமையான நேரத்தில் டொயோட்டா நிறுவனம் தனது புதிய "பார்ச்சூனர் லீடர்" எடிசன் காரின் முன்பதிவையும் துவங்கி உள்ளது. குறிப்பிட்ட டீலர்கள் மூலம் மக்கள் இந்த புதிய "பார்ச்சூனர் லீடர்" எடிஷன் காரை புக் செய்து கொள்ளலாம். இந்த புதிய காரை பொறுத்தவரை ஏற்கனவே இருந்த ஃபார்ச்சூனரை காட்டிலும் சில மாறுதல்களும் மற்றும் சில Upgrade செய்யப்பட்டுள்ளது.
இரட்டை டோன் கொண்ட வெளிப்புற பெயிண்ட் மற்றும் கருப்பு முழம் பூசப்பட்ட அலாய் வீல்கள் இதில் புதிதாக இடம் பெறுகின்றன. ஒரு ஸ்போர்ட் லுக்கை கொடுப்பதற்காக முன்னும் பின்னும் அதற்கென்று பிரத்தியேகமான பம்பர்கள் இந்த புதிய காரில் இணைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கார்களினுடைய டயர்களில் "டயர் பிரஷர் மானிட்டரின் சிஸ்டம்" என்று அழைக்கப்படும் TPMS பொருத்தப்பட்டுள்ளது.
இந்த காரின் வெளியீட்டு குறித்து பேசிய டொயோட்டா நிறுவனத்தின் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் தலைவர் சபரி மனோகர், "எங்களுடைய கார்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஏகோபித்த ஆதரவு குறித்து நாங்கள் அறிவோம். எங்களுடைய வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். மக்களுக்கு எங்களால் முடிந்த அளவிலான சொகுசான பயணத்தை கொடுக்க நாங்கள் முழு முயற்சியோடு பணியாற்றி வருகிறோம்".
"முழு சக்தியும் புதிய ஸ்டைலும் கொண்ட ஒரு புத்தம் புது காராக இந்த பார்ச்சூனர் லீடர் இருக்கும்" என்று அவர் கூறியிருக்கிறார். இது ஒரு SUV எனப்படும் Sports Utility Vehicle என்பதால் இதில் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது, 6 பீட் ஆட்டோமேட்டிக் டிரன்ஸ்லேஷன் கொண்ட இந்த வாகனம் ஆறு ஸ்பீட் மேனுவல் கியர் வடிவிலும் வருகிறது. மேலும் இந்த வாகனம் 4 X 2 அமைப்புடன் செயல்படும்.