Piaggio Vespa Special Edition : உலக அளவில் புகழ் பெற்ற பியாஜியோ நிறுவனம் கடந்த 1884ம் ஆண்டு முதல் தனது வாகனங்களை உலக சந்தையில் விற்பனை செய்து வருகின்றது.
பிரபல வெஸ்பா பைக்கின் தாய் நிறுவனமான பியாஜியோ குழுமம் இந்த ஆண்டு தனது 140வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. மேலும் இந்த பிரம்மாண்டமான கொண்டாட்டத்தை மேலும் சிறப்பானதாக மாற்ற லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த இதைவிட சிறந்த நேரம் இருந்திருக்க முடியாது என்றே கூறலாம்.
பியாஜியோவின் வெஸ்பா 140 என்று அழைக்கப்படும் இந்த புதிய ஸ்கூட்டர், வெஸ்பா ஜிடிவியை அடிப்படையாகக் கொண்டது மற்றும் இது உலகளவில் 140 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு வரும் என்று அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் சில சர்வதேச டீலர்களிடம் மட்டுமே விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது வரும்? சஸ்பென்ஸை உடைத்த ஹோண்டா நிறுவனம்!
சரி இந்த ஸ்கூட்டரின் சிறப்பு என்ன?
பியாஜியோவின் Vespa 140th வெள்ளை நிறத்தில் வெளிர் மற்றும் அடர் நீல நிற கோடுகளுடன் முன் ஆர்பான் மற்றும் பக்கவாட்டு பேனல்களில் அழகாக தோன்றுகிறது. இடது பக்க பேனலில் ஒட்டப்பட்டுள்ள ‘140’ என்ற எண்ணும் அதிக கவனத்தை பெறுகின்றது என்றே கூறலாம். மிகவும் ஸ்பெஷல் வாகனம் இதுவென்பதால் அதிக சிரத்தையோடு இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெஸ்பா ஜிடிவியை அடிப்படையாகக் கொண்டு, முன்பக்க மட்கார்ட் பொருத்தப்பட்ட ஹெட்லைட் மற்றும் வளைந்த பாடிவொர்க் ஆகியவற்றால் நிரம்பிய கிளாசிக் வெஸ்பா தோற்றத்தையும் இந்த புதிய பைக் பிரதிபலிக்கிறது. இந்த ஸ்கூட்டர் 24bhp மற்றும் 27Nm ஆற்றலை வழங்கும் 278சிசி, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. என்ஜின் CVT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் டிஜிட்டல் டிஸ்ப்ளே, கீலெஸ் ஸ்டார்ட், டிராக்ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ் மற்றும் பல அம்சங்கள் உள்ளது.
இந்த வெஸ்பா 12 அங்குல சக்கரங்களில் பயணிக்கிறது, அதே நேரத்தில் பிரேக்கிங்கை பொறுத்தவரை இரு முனைகளிலும் 220 மீ ஹைட்ராலிக் டிஸ்க்குகளால் ஆதரிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் நடைபெற்று வரும் Vespa World Days 2024 கொண்டாட்டத்தின் போது, பியாஜியோவின் வெஸ்பா 140வது ஸ்கூட்டரை ஆன்லைனில் வாங்கலாம். இதன் விலை குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
200 கிலோமீட்டர் வேகம்.. ஹைவே ரைடுக்கு ஏற்ற பஜாஜின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விலை ரொம்ப கம்மி..