ஹோண்டா இந்தியா நிறுவனம், ஆக்டிவா EV ஸ்கூட்டரை 2024 டிசம்பரில் குஜராத் மற்றும் கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்ய உள்ளது.
ஹோண்டா இந்தியா நிறுவனம், ஆக்டிவா EV ஸ்கூட்டரை 2024 டிசம்பரில் அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், குஜராத் மற்றும் கர்நாடகாவில் உள்ள ஹோண்டா தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்ய உள்ளது.
கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து ஹோண்டா தனது எலெக்ட்ரிக் வாகன திட்டங்களை குறைத்தது. இந்நிலையில் இப்போது உற்பத்தியை விரிவுபடுத்தும் முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் அதிகரித்து வரும் மின்சார வாகனத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, EV சந்தையில் முக்கிய இடத்தைப் பிடிக்கவும் ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
undefined
2024-2025 நிதியாண்டின் இரண்டாம் பாதியில் குஜராத் தொழிற்சாலை 6.6 லட்சம் யூனிட்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையானது நிறுவனத்தின் மொத்த உற்பத்தி திறனை ஆண்டுக்கு சுமார் 9 லட்சம் யூனிட்கள் வரை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்பு
இந்தியாவில் இருசக்கர வாகன சந்தையில் உள்ள வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து ஹோண்டா நம்பிக்கையுடன் உள்ளது. 2024-2025 நிதியாண்டில் 15 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி விகிதத்தை எட்டும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 2019-20 நிதியாண்டில் எட்டிய முந்தைய உச்ச அளவான 5.9 மில்லியன் யூனிட்களை கடக்கவும் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
ஆக்டிவா EV அறிமுகம் செய்யப்படுவதை முன்னிட்டு, வரும் நிதியாண்டில் ஸ்கூட்டர் உற்பத்தி 11 சதவீதம் அதிகரிக்கும் என ஹோண்டா கணித்துள்ளது. கூடுதலாக, மோட்டார் சைக்கிள் வெளியீடு 2.65 மில்லியன் யூனிட்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 23 சதவிகிதம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிக்கிறது.
2024 நிதி ஆண்டில் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி 17.97 மில்லியன் யூனிட்களை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 13.3 சதவீத வளர்ச்சி ஆகும். கிராமப்புறங்களில் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
உங்க மொபைல் ஓவர் ஹீட் ஆகுதா? கண்டிப்பா இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க!