
Tuareg 660 ஆனது RS மற்றும் Tuono 660 போன்ற அதே திரவ-குளிரூட்டப்பட்ட, 659cc, 270-கிராங்க் பேரலல்-ட்வின் மூலம் இயக்கப்படுகிறது. ஆனால் இந்த கட்டமைப்பில், இது 9,250rpmல் 80hp மற்றும் 6,500rpmல் 70Nm என மதிப்பிடப்படுகிறது. இது இரட்டை சிலிண்டர் ADV மோட்டார்சைகில்களில் மிகவும் இலகுவானது. அதே நேரம் 860 மிமீ என்ற இருக்கை உயரத்துடன் சற்று உயரமான வண்டியாகவும் இது இருக்கும்.
பிரேக்கிங் அமைப்பை பொறுத்தவரை இரட்டை 300 மிமீ டிஸ்க் பிரேக்குகள் மூலம் அச்சு பிரெம்போ காலிப்பர்கள் மற்றும் ஒற்றை பிஸ்டன் காலிபருடன் இணைக்கப்பட்ட ஒற்றை 260 மிமீ ரியர் டிஸ்க் மூலம் கையாளப்படுகிறது. டுவாரெக் 21/18-இன்ச் வயர்-ஸ்போக் சக்கர அமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் இது 90/90-21 (முன்) மற்றும் 150/70- அளவுள்ள ட்யூப்லெஸ் பைரெல்லி ஸ்கார்பியன் ரேலி STR டயர்களில் இயங்குகிறது.
அதிரடியாக விலையை குறைத்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. இப்போதைய தள்ளுபடியை விட்றாதீங்க..
Tuareg இந்தியாவிற்கு புதியது என்றாலும், இந்த மற்ற மாடல்கள் சில காலமாக விற்பனையில் உள்ளன. 2024 ஆம் ஆண்டில், Tuono 660 விலை ரூ. 17.44 லட்சம் மற்றும் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது அவை டார்க் ரெட் மற்றும் ரஷ் கிரே ஆகியவை ஆகும். அதே போல இதன் ஹை எண்டு மாடல் 18.85 லட்சம் வரை விற்பனையாகவுள்ளது.
இந்த பைக்குகள் அனைத்தும் நோயல், இத்தாலியில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படுகின்றன, அதை வாங்க விரும்புவர்கள் அதன் விலையில் 50 சதவீதத்தை முன்பதிவு வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். காத்திருப்பு காலம் தோராயமாக மூன்று மாதங்கள் என்று கருதப்படுகிறது. இருப்பினும் அந்த காலம் அதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதிவேக மின்சார ஸ்கூட்டர்.. வெறும் 49,999 ரூபாய் தான்.. இந்தியாவின் விலை குறைந்த ஸ்கூட்டர்..