தீர்க்க முடியாத பிரச்சினை... மேக்னைட் கார்களை திரும்பப் பெறும் நிசான் நிறுவனம்!

By SG Balan  |  First Published Apr 17, 2024, 10:11 PM IST

சென்சார் பிரச்சினை பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், மாற்றங்கள் செய்வது தொடர்பாக திட்டமிடுவதற்காக ஏப்ரல் மாதத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை நேரடியாகத் தொடர்புகொள்ள இருப்பதாக நிசான் கூறியுள்ளது.


நிசான் நிறுவனம் இந்தியாவில் தங்களின் பிரபலமான காரான நிசான் மேக்னைட் சப்-காம்பாக்ட் எஸ்யூவியை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. கதவு கைப்பிடி சென்சாரில் உள்ள சிக்கல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை XE மற்றும் XL மாடல்களில் டிரிம்களை பாதிக்கிறது என்று நிசான் நிறுவனம் கூறியுள்ளது.

நவம்பர் 2020 முதல் டிசம்பர் 2023 வரை தயாரிக்கப்பட்ட மேக்னைட் கார்களை திரும்பப் பெறுவதாக அந்த நிறுவனம் கூறியிருக்கிறது.

Tap to resize

Latest Videos

2024ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் மேக்னைட் கார்களில் இந்த சென்சார் கோளாறு இருக்காது என்றும் கூறப்படுகிறது. இந்த பிரச்சினையால் பயணிகளுக்கு பாதுகாப்பு ஆபத்து ஏதும் ஏற்படாது எனவும் கார் ஓட்டுவதிலும் இடையூறு இருக்காது என்றும் நிசான் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

பிணத்தை வைத்து வங்கியில் கடன் பெற முயன்ற பிரேசில் நாட்டு பெண்!

சென்சார் பிரச்சினை பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், மாற்றங்கள் செய்வது தொடர்பாக திட்டமிடுவதற்காக ஏப்ரல் மாதத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை நேரடியாகத் தொடர்புகொள்ள இருப்பதாக நிசான் கூறியுள்ளது.

நவம்பர் 2020 முதல் டிசம்பர் 2023 வரையான காலக்கெடுவுக்குள் தயாரிக்கப்பட்ட மேக்னைட் காரை வைத்திருப்பவர்கள், நிறுவனத்திடமிருந்து முறையான தகவல் வரும் வரை காத்திருக்கலாம். நாடு முழுவதும் உள்ள நிசான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சேவை மையத்தில் இந்தச் சிக்கலுக்கு இலவசமாக சர்வீஸ் செய்யப்படுகிறது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிசான் மேக்னைட் கார் 1.0-லிட்டர், 3-சிலிண்டர் NA பெட்ரோல் எஞ்சின் கொண்டது. இது XE, XL, XV மற்றும் XV பிரீமியம் என நான்கு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6 லட்சத்தில் தொடங்கி ரூ. 9.65 லட்சம் வரை உள்ளது.

ஏப்ரல் 19ஆம் தேதி இந்த நகரங்களுக்கு மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை! ரிசர்வ் வங்கி அறிவிப்பு

click me!