
Royal Interceptor Bear 650 சிறப்பு அம்சங்கள்
ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் ஷாட்கன் 650 மற்றும் சூப்பர் மீடியோர் 650 போன்றே, ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் பியர் 650 ஆனது USD ஃபோர்க்கை கொண்டு இயங்கும். 650 Twinsகளில் காணப்படும் எளிமையான Telescopic யூனிட் இதில் இருக்காது. மற்ற 650 வகை பைக்குகளை போலல்லாமல், முன் பிரேக் டிஸ்க் புதிய ஹிமாலயன் போல இடது புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பின்புறத்தில் உள்ள ட்வின் ஷாக் அப்சார்பர் அமைப்பு மற்ற ராயல் என்ஃபீல்டு 650s போலவே உள்ளது. ஆனால் இரு முனைகளிலும் உள்ள சஸ்பென்ஷன் யூனிட்கள் நிலையான ஸ்ட்ரீட் ரக பைக்கை விட அதிக வலுவுடையதாக கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இன்டர்செப்டர் பியர் 650 பிளாக்-பேட்டர்ன் டயர்களுடன் சோதனை செய்ய்ப்பட்டதை இணையத்தில் பார்க்கமுடிந்தது.
200 கிலோமீட்டர் வேகம்.. ஹைவே ரைடுக்கு ஏற்ற பஜாஜின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விலை ரொம்ப கம்மி..
ராயல் என்பீல்ட் நிறுவனத்திற்கே உரித்தான கிளாசிக்கல் பாணியிலான இந்த பைக்கின் எரிபொருள் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வேலைப்பாடு மற்றும் குட்டையான பின் பகுதி ஆகியவை இந்த பைக்கிற்கு மிகவும் அழகான தோற்றத்தை அளிக்கின்றன என்றே கூறலாம். என்ன தான் ஒரு ரெட்ரோ தோற்றம் இருந்தபோதிலும், இன்டர்செப்டர் பியர் 650 தன்னை சுற்றிலும் LED விளக்குகளை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்டர்செப்டர் பியர் 650 இந்த ஆண்டின் இறுதியில் இருந்து விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் இன்டர்செப்டர் 650 பைக் சுமார் 3,63,000 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில், இந்த புதிய இன்டர்செப்டர் பியர் 650 நிச்சயம் அதைவிட அதிக விலையில் தான் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்பீல்ட் நிறுவனம் இந்த 2024ம் ஆண்டில் 650cc மற்றும் 250ccக்கு இடைப்பட்ட விகிதத்தில் பல புதிய பைக்குகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பெரியவர்கள் முதல் இளசுகள் வரை அனைவரும் ராயல் என்பீல்ட் பைக்கை சொந்தமாக்கிக்கொள்ள ஆசை படுவது அனைவரும் அறிந்ததே.